கிருஷ்ணகிரி அருகே கட்டிக்கானபள்ளி ஊராட்சிக்கு உட்பட்ட தேவசமுத்திரம் என்கிற பகுதியில் கிருஷ்ணகிரி பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை ஒரம் மயானம் உள்ளது. இந்த மயானத்தில் கிருஷ்ணகிரி நகரத்துக்கு சேர்ந்த ஜக்கப்பநகர் மிளகாய் கார தெரு, சந்தப்பேட்டை, போன்ற பகுதிகளை சார்ந்த நபர்கள் இயற்கை எய்தியபின் அவர்களின் உடல்கள் இந்த மயானத்தில் நல்லடக்கம் செய்யப்படுகிறது. ஏற்கனவே பராமரிப்பின்றி மயானம் உள்ள நிலையில் கடந்த சில ஆண்டுகளாக ஊராட்சி குப்பைகள் மற்றும் நகராட்சி பகுதியில் உள்ள குப்பை கழிவுகள் இறைச்சிகள் இறைச்சி கழிவுகள் போன்றவை மயானத்தில் கொட்டப்பட்டு வருகிறது.
இங்கு கொட்டப்படும் குப்பை மற்றும் இறைச்சி கழிவுகளில் நாய்கள் மாடுகள் போன்றவை சாப்பிட்டு நோய்வாய்ப்பட்டு வருகிறது. மேலும் துர்நாற்றமும் வீசி வருகிறது. இதனால் அந்த வழியாக செல்லும் பொதுமக்கள் மூக்கை மூடிக்கொண்டு செல்கின்றனர். இந்த நிலையில் அவ்வப்போது குப்பைகளை கொட்டும் நபர்கள் பல நேரங்களில் குவிந்து கிடக்கும் குப்பைகளை தீ வைத்து செல்கின்றனர் இதனால் அந்த பகுதி முழுவதும் புகை மூட்டமாக திகழ்கிறது இதனால் தேசிய நெடுஞ்சாலையில் செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்கு இடையே செல்கின்றனர் பல நேரங்களில் எதிரே வரும் வாகனங்கள் தெரியாமல் விபத்துக்கள் நேரிடும் வகையில் புகைமூட்டம் அதிக அளவில் காணப்படுவதுடன் அருகே உள்ள குடியிருப்பு பகுதிகளுக்குள் புகை பரவுவதால் சுவாசக் கோளாறு மற்றும் நோய் தொற்று ஏற்படுவதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். எனவே நகராட்சி மற்றும் கட்டிக்கான பள்ளி ஊராட்சி நிர்வாகம் இதனை முறைப்படுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.