திருவட்டார் டிச 22
குமரி மேற்கு மாவட்டம்,திருவட்டார் தெற்கு ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட ஊராட்சிகளின் குப்பைகளை எடுத்து செல்வதற்கு தமிழக அரசால் வழங்கப்பட்ட (E.cart)மின் வண்டியை குமரி மேற்கு மாவட் செயலாளரும், பத்மநாபபுரம் சட்டமன்ற உறுப்பினருமான த.மனோ தங்கராஜ் கொடியசைத்து துவக்கி வைத்தார்.உடன் திருவட்டார் தெற்கு ஒன்றிய செயலாளர் ஜாண்பிரைட்,மாவட்ட துணை செயலாளர் ராஜ், ஒன்றிய துணை செயலாளர் ராஜூ,பேரூர் செயலாளர் சோழராஜன், பேரூராட்சி துணை தலைவர் தங்கவேல், மாவட்ட அணிகளின் துணை அமைப்பாளர்கள் சிவன், லெனின்,விஷ்னு குமார்,ஜோண்ஸ், ஏற்றக்கோடு ஊராட்சி தலைவர்கள் ரெஜினி விஜிலா பாய்,கெப்சிபாய் றூஸ், அனுசன் ஐயப்பன்,ஏசுதாஸ் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர் சசி மற்றும் ஒன்றிய அலுவலர்கள், தொண்டர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.