காந்தி நிகேதன் ஆசிரமம் 84வது ஆண்டு விழா!
டி.கல்லுப்பட்டி காந்திநிகேதன் ஆசிரமம் , கோ.வே.மேல்நிலைப்பள்ளி 84வது ஆண்டு விழாவும், நிறுவனர் வெங்கடாசலபதி அவர்கள் 115வது பிறந்த நாள் விழாவும் கலசலிங்கம் பல்கலைக்கழக வேந்தர் முனைவர் கே.ஸ்ரீதரன் தலைமையில் நடைபெற்றது.
ஆசிரமத் தலைவர் முனைவர் வ.கீதா ஆண்டறிக்கையை வழங்கினார்.
மதுரை மாநகராட்சி ஆணையாளர் தினேஷ்குமார் கலந்துகொண்டு ஆசிரியர்களுக்கும், மாணவர்களுக்கும் பரிசுகளை வழங்கிப் பாராட்டினார். மேலும் சிறப்பு விருந்தினர்கள் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்எஸ்.பி.சித்தன், சாகித்ய அகாடமி விருது பெற்ற முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி இராஜேந்திரன் ஆகியோர் கலந்து கொண்டு ஆசிரம நிறுவனர் ஆற்றிய மக்கள் பணி, கோ.வே. பள்ளிகளின் ஒழுக்கம், கொள்கைகள், பயிற்சிகள் பற்றிப் பேசினர்.
பள்ளி தலைமை ஆசிரியை அபிராமி நன்றி கூறினார்.
ஆசிரம நிர்வாகக்குழு உறுப்பினர்கள், ஆசிரியர்கள், பணியாளர்கள்,
மாணவர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.