மதுரை அக்டோபர் 20,
மதுரை திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் கந்தசஷ்டி திருவிழா
மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றம், அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயிலில், ஐப்பசி மாதம் கந்தசஷ்டி திருவிழா மிகச்சிறப்பாக நடைபெற உள்ளது மேற்கண்ட திருவிழாவில் 07.11.2024 சூரசம்ஹார நிகழ்வு, சுவாமி புறப்பாடு நிகழ்வுகள். பக்தர்கள் மாவிளக்கு எடுக்கும் நிகழ்வுகள் மற்றும் 08.11.2024 அன்று சுவாமி புறப்பாடுகள் நிகழ்வுகள், கடம் புறப்பாடுகள் நிகழ்வுகள் மற்றும் சட்டத்தேர் கிரிவலம் வரும் நிகழ்ச்சிகள் ஆகியன நடைபெறுவதை கருத்தில் கொண்டு மேற்கண்ட இரண்டு நாட்களும் அதிக அளவு பக்தர்கள் இத்திருக்கோயிலுக்கு சுவாமி தரிசனம் செய்ய வருகைபுரிவதை முன்னிட்டும் ஏற்கனவே திருக்கோயிலுக்குள் காப்புகட்டி விரதம் இருக்கும் பக்தர்கள் கூட்டம் மற்றும் திருமண வைபவங்களுக்கு வரும் கூட்டம் ஆகிய இரண்டு நிகழ்வுகளினால் சுவாமி தரிசனம் செய்ய வருகை தரும் பக்தர்களுக்கு மிகவும் சிரமமான சூழல் ஏற்படும் என்பதால், இதனை கருத்தில்கொண்டு பக்தர்களின் நலன்கருதி இத்திருக்கோயிலின் உப கோயிலான சன்னதி தெருவில் உள்ள அருள்மிகு சொக்க நாதர்சுவாமி திருக்கோயிலில் 07:112024 மற்றும் 08.11.2024 ஆகிய இரண்டு நாட்களுக்கு மட்டும் முற்றிலும் தற்காலிக ஏற்பாடாக இத்திருக்கோயிலின் பதிவு செய்யப்பட்ட திருமணங்கள் நடைபெறும் என்ற விபரம் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.
எனவே, பக்தர்கள் தங்களது திருமண விபரங்களை திருக்கோயிலில் பதிவுசெய்து இத்திருக்கோயிலின் உபயகோயிலான அருள்மிகு முறையாக சொக்க நாதர்சுவாமி திருக்கோயிலில் திருமணங்கள் நடைபெற உரிய முன்னேற்பாடுகள்
செய்து கொள்ள மேற்கண்ட தினங்களில் திருக்கோயில் நிர்வாகத்திற்கு ஒத்துழைப்பு நல்கிட
கோவில் நிர்வாகம் கேட்டுக்கொண்டனர். இந்நிகழ்ச்சியை
திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயில் துணை ஆணையர்/செயல் அலுவலர் எம்.சூரியநாராயணன் மற்றும் அறங்காவலர் குழுத்தலைவர் சத்தியபிரியா, மற்றும் அறங்காவலர்கள் மணிச்செல்வம், பொம்மதேவன், சண்முகசுந்தரம், இராமையா மற்றும் கண்காணிப்பாளர்
ஆகியோர் நிகழ்ச்சியை சிறப்பாக நடத்திட ஏற்பாடுகள் செய்து வருகின்றனர்.