கம்பம்.
தேனி மாவட்டம் கம்பத்தில் தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் 50-வது பிறந்தநாள் தினத்தை முன்னிட்டு கம்பம் கௌமாரியம்மன் கோவிலில் அவருடைய பெயருக்கு சிறப்பு அர்ச்சனை செய்யப்பட்டது.இதனைத் தொடர்ந்து கம்பம் சட்டமன்ற தொகுதி நிர்வாகிகள் சார்பில் பொதுமக்களுக்கும்,வாகன ஓட்டிகளுக்கும் இனிப்புகள் வழங்கி பிறந்தநாள் விழாவினை வெகு விமர்சியாக கொண்டாடினர்.