தஞ்சாவூர். நவ.22
தஞ்சாவூரில் விளையாட்டு விடுதி மாணவர்களுக்கு விளையாட்டு உபகரணங்களை அமைச்சர் கோவி செழியன்வழங்கினார்.
20 24 – 2025ஆண்டிற்கான விளையாட்டு விடுதி மாணவர்களு க்கு சேம்பியன் கிட் (விளையாட்டு உபகரணங்கள்) வழங்கும் நிகழ்ச்சி தஞ்சாவூர் அன்னை சத்யா விளையாட்டு அரங்கில் நடைபெற்றது.
விழாவிற்கு மாவட்ட ஆட்சித் தலைவர் பிரியங்கா பங்கஜம் தலைமை தாங்கினார். துரை சந்திரசேகரன் எம் எல் ஏ ,மேயர் சண். ராமநாதன், மாவட்ட ஊராட்சி குழு தலைவர் உஷா புண்ணிய மூர்த்தி ,துணை மேயர் டாக்டர் அஞ்சுகம் பூபதி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில் அமைச்சர் கோவி. செழியன் கலந்து கொண்டு விளையாட்டு விடுதி மாணவர்களுக்கு பயன் பெறும் வகையில் தலா ரூபாய் 3360 வீதம் 63 மாணவர்களுக்கு ரூபாய் 2,11,680 மதிப்பிலான சாம்பியன் கிட் வழங்கினார்.
பின்னர் பஞ்சாப் மாநிலம் பட்டியாலாவில் நடந்த கேலோ இந்தியா பளு தூக்குதல் போட்டி யில் தமிழக அணி சார்பில் தஞ்சாவூர் சேர்ந்த 10 மாணவிகள் 5 மாணவர்கள் பங்கேற்றனர். இதில் 64 கிலோ எடை பிரிவில் மாணவி யாஸ்மின் தங்கப் பதக்கமும், 71 கிலோ எடை பிரிவில் மாணவி சியாமளா வெண்கல பதக்கமும், 87 கிலோ எடை பிரிவில் மாணவி அபிநயா வெள்ளி பதக்கமும், 67 கிலோ எடை பிரிவில் மாணவர் ராகுல் வெள்ளி பதக்கமும் பெற்றனர். மேலும் 4 மாணவிகள் 4வது இடம் பிடித்தனர்
இதன் மூலம் அதிக புள்ளிகள் பெற்றதின் அடிப்படையில் ஒட்டுமொத்த சாம்பியன் பட்டம் தஞ்சாவூர் மாணவிகளுக்கு வழங்கப்பட்டது. இதற்கான சுழற் கோப்பையை வெற்றி பெற்ற மாணவிகள் அமைச்சர் கோவி. செழியனிடம் காண்பித்து வாழ்த்து பெற்றனர், அவர்களை அமைச்சர் பாராட்டினார்.
இந்த நிகழ்ச்சியில் பயிற்சி ஆட்சியர் உத்கர்ஷ் குமார், மாவட்ட விளையாட்டு அலுவலர் டேவிட் டேனியல், சதய விழா குழு தலைவர் செல்வம், பளுதூக்குதல் போட்டி பயிற்சியாளர் தாரணி மற்றும் வீரர் வீராங்கனைகள் கலந்து கொண்டனர்.