காட்பாடி டிஎஸ்பி பொறுப்பேற்பு!
வேலூர்_02
வேலூர் செப்.1-
காட்பாடி புதிய டிஎஸ்பியாக பழனி பொறுப்பேற்றுக் கொண்டார். இதற்கு முன்னர் வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் துணை காவல் கண்காணிப்பாளராக பணியாற்றி வந்தார் .இந்நிலையில் இவர் காட்பாடி டிஎஸ்பியாக மீண்டும் பணியிட மாற்றம் செய்யப்பட்டு பொறுப்பேற்றுக் கொண்டார். இவர் ஏற்கனவே காட்பாடி டிஎஸ்பியாக பணியாற்றிய போது உட்கோட்டத்தை தனது கட்டுப்பாட்டில் வைத்துக் கொண்டு அசம்பாவிதங்கள் எதுவும் நடைபெறாமல் கன்னும் கருத்துமாக பார்த்துக் கொண்டார். பொதுமக்களிடம் நன்மதிப்பும் அவர்களிடம் தனி உபசரிப்பும் உடையவராக நடந்து கொண்டு அவர்களுக்கு பல்வேறு உதவிகளையும் புரிந்தார் பழனி என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிழ
லையில் மீண்டும் பழனி காட்பாடி டிஎஸ்பி ஆக பணியிடமாற்றம் செய்யப்பட்டு வந்ததற்கு காட்பாடி தாலுகா பொதுமக்கள் மிகவும் மகிழ்ச்சியையும் வரவேற்பையும் தெரிவித்துள்ளனர் .இவரது காலத்தில் தான் காட்பாடி காவல் நிலையம் சிறந்த காவல் நிலையத்துக்கான விருதையும் பாராட்டையும் காவல்துறை தலைவர் சங்கர் ஜூவால் கைகளால் பதக்கம் மற்றும் பாராட்டு பெற்றது குறிப்பிடத்தக்கது .10 காவல் நிலையங்களில் காட்பாடி காவல் நிலையம் ஒன்றாக கொண்டு வந்தது இவரது காலகட்டத்தில் தான் என்பதும் குறிப்பிடத்தக்கது காட்பாடியில் இருந்து வேலூருக்கு சென்றதும் சற்று தெளிவிஸ்ஸ் காணப்பட்ட காட்பாடி உட்கோட்டம் தற்போது மீண்டும் புதிய உத்வேகத்துடனும் செயல்பட ஆரம்பித்துள்ளது குறிப்பிடத்தக்கது.