அரியலூர், நவ.15
அரியலூர் மாவட்டத்திலுள்ள அரசுப் பள்ளிகளில் மகிழ் முற்றம் தொடக்க விழா வியாழக்கிழமை நடைபெற்றது.
பள்ளிகளில் மாணவர்களை குழுவாக உருவாக்கி, குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என ஐந்து வகை பிரிவுகளாக பிரித்து மகிழ் முற்றம் என்ற பெயரை தொடங்க வேண்டும் என்று பள்ளி கல்வித் துறை அறிவுறுத்தியது.
அதன்பேரில் மாவட்டத்திலுள்ள அனைத்து அரசுப் பள்ளிகளிலும் மகிழ் முற்றம் தொடங்கப்பட்டது. இதில் அரியலூர் அடுத்த சிறுவளூர் அரசு உயர்நிலைப் பள்ளியில் நடைபெற்ற மகிழ் முற்றம் தொடக்க விழாவுக்கு அப்பள்ளியின் தலைமை ஆசிரியர் சின்னதுரை தலைமை வகித்து, மாணவர்களிடையே தலைமை பண்பை உருவாக்கும் பொருட்டு
மகிழ் முற்றம் என்ற பெயரில் மாணவர் குழுக்கள் உருவாக்கப்பட்டுள்ளன.
இக்குழுவின் முக்கிய நோக்கங்கள் குழு செயல்பாடு, சமூக மனப்பான்மை கற்றல் திறன் மேம்பாடு, மாணவர் விடுப்பு எடுப்பதை குறைத்தல், தலைமைத்துவ பண்பை உருவாக்குதல், வேற்றுமையில் பரஸ்பர ஆதரவு நேர்மறை எண்ணங்களை வலுவூட்டுதல் ஆசிரியர் மாணவர் உறவு மேம்பாடு ஆகியவையாகும்.
ஒவ்வொரு குழுவுக்கும் ஒரு பொறுப்பாசிரியர் மற்றும் இரண்டு மாணவர் தலைவர்களை நியமிக்கப்பட்டுள்ளனர் என்றார்.
முன்னதாக குழந்தைகள் தின விழாவில் அனைத்து மாணவ மாணவிகளுக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில ஆசிரியர்கள் செந்தமிழ்ச்செல்வி, தனலட்சுமி, வெங்கடேசன், அந்தோணிசாமி, அபிராமி, பாலமுருகன் மற்றும் மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.
இலுப்பையூர்… இலுப்பையூரிலுள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் நடைபெற்ற மகிழ் முற்றம் தொடக்க விழாவுக்கு, தலைமை ஆசிரியர் விஜயராணி தலைமை வகித்து, மகிழ் முற்றம் தொடங்குவதன் நோக்கம் குறித்து எடுத்துரைத்தார். பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினர் லட்சமி, பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் மணிகண்டன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை ஆசிரியர்கள் மாயூபி, தீபக், பிரிட்டோ ஆல்பர்ட் அருண் ராஜ், மதியழகன், தொழில் நுட்ப ஆசிரியர் அனிதா, கஸ்தூரி ஆகியோர் செய்திருந்தனர்.
இதே போல் மாவட்டத்திலுள்ள அனைத்து அரசுப் பள்ளிகளிலும் மகிழ் முற்றம் தொடங்கப்பட்டது.
அரியலூர் மாவட்ட செய்தியாளர் வினோத்குமார்