ஆக.23
திருப்பூர் மாவட்டம் உடுமலை பரிசோதனை
முகாம் குறித்து கோபுரம் பவுண்டேஷன் நிறுவனர் கோவிந்தராஜ் கூறுகையில்.
கோபுரம் பவுண்டேஷன் 2014 ஆம் ஆண்டு துவங்கப்பட்டது. இது கடந்த பத்து வருடங்களாக மக்கள் சேவையில் மகத்தான பணிகளை செய்து வருகிறது.
சாலையோரம் உள்ள ஏழை எளியவர்களுக்கு உணவு வழங்குதல், மாற்றுத்திறனாளிகளுக்கு மருத்துவ முகாம் மற்றும் உபகரணங்கள் வழங்குதல் ஏழை எளிய மக்கள் பயன்பெறும் வகையில் இலவச மருத்துவ முகாம்கள், ஆதரவற்ற நிலையில் மரணமடையும் உடல்களை நல்லடக்கம் செய்தல் போன்ற பணிகளையும் செய்து வருகிறது.
மேலும் அரசு பள்ளியில் பயிலும் குழந்தைகளுக்கு தேவையான நோட்டு, புத்தகம் உள்ளிட்ட உபகரணங்கள் வழங்கப்பட்டும் வருகிறது.
குறிப்பாக
தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் மக்கள் பயன்பெறும் வகையில் முழு உடல் பரிசோதனை குறைந்த கட்டணத்திலும் செய்து வருகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.