கிருஷ்ணகிரி ஆக21:
கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட செயலாளரும்,பர்கூர் சட்டமன்ற உறுப்பினருமான தே.மதியழகன் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு பர்கூர் தொகுதி ஜெகதேவி மற்றும் பெருகோப்பனப்பள்ளி ஊராட்சிகளில் தூய்மை பணியாளர்கள்,டேங்க் ஆபரேட்டர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் இலவச வேட்டி, சேலை மற்றும் இனிப்புகளை வழங்கினார்கள். தலைமை செயற்குழு உறுப்பினர் ஜெ.கே.கிருபாகரன் தலைமையில் நடைபெற்ற இந்த பிறந்தநாள் விழா நிகழ்ச்சியில் பெருகோப்பனபள்ளி கிளைச் செயலாளர் பி.டி.மகேந்திரன் ஏற்பாட்டில்
ஊராட்சி மன்ற தலைவர் கே. முரளிதரன், துணை தலைவர் சரவணன், இளைஞர் அணி துணை அமைப்பாளர் சக்தி, ஊராட்சி செயலாளர் செங்கதிர் செல்வன், எம்.ஜி.முனுசாமி, சின்னராஜ் மற்றும் கழக நிர்வாகிகள் ஒன்றிய துணைச் செயலாளர் ராஜதுரை, மாவட்ட இலக்கிய அணி அமைப்பாளர் எஸ்.பாலாஜி, பி.டி.ஏ தலைவர் நெடுஞ்செழியன், அமைப்பு சாரா ஓட்டுநர் அணி மாவட்ட துணை அமைப்பாளர் ரூபேஷ், ஊர் கவுண்டர் வேலு, நஞ்சுண்டன், ராமமூர்த்தி, அனீஸ், சண்முகம், பாபு, பாலகுமார், சுரேஷ், ரமேஷ், நவாப், ரபீக், பாரஹான், துரைசாமி, நாராயணன்,சுப்பிரமணி, ராமன் உள்பட பலர் கலந்துகொண்டு புடவை-வேட்டி மற்றும் இனிப்புகள் வழங்கினார்கள்.