பெண்கள் முன்னேற்ற அறக்கட்டளை மாற்று திறனாளி பெண்களுக்கு தேவையான சுயதொழில் தொடங்குவதற்காக பயிற்சி மற்றும் இயந்திரங்கள் இலவசமாக வழங்கபட்டது.
காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர், சந்தவேலூர் ஊராட்சியில் உலக மாற்று திறனாளிகள் தினத்தை முன்னிட்டு மாற்று திறனாளி சுயமாக யாருடைய எதிர்பார்புமின்றி தங்களது வாழ்வாதரத்திற்கு தேவையான பொருளாதரத்தை ஈட்டும் வகையில் மறு சுழற்சி சையப்பட காகிதம் இருந்து பேப்பர் பென் தயாரிக்கும் இயந்திரங்கள் வழங்கப்பட்டுள்ளது.
இதன்மூலம் மாற்று திறனாளி பெண்கள் வீட்டில் இருந்தே மாதந்தோறும் 5000 வரை அவர்கள் சம்பாதிக்க முடியும்.
மேலும் மாற்று திறனாளிகள் சுயதொழில் தொடங்குவதற்கான அனைத்து ஏற்பாடுகளை பெண்கள் முன்னேற்ற அறக்கட்டளை செய்துள்ளது.
இந்த நிகழ்ச்சிகான ஏற்பாடுகளை பெண்கள் முன்னேற்ற அறக்கட்டளை நிறுவனர் திவ்யா சுவப்னாராஜ் செய்திருந்தார். இதில் ஊராட்சி மன்ற தலைவர் வேண்டா மணி, மாவட்ட மாற்றுத் திறனாளிகள் இயக்குனர் மலர்விழி ஆகியோர் கலந்து கொண்டு மாற்று திறனாளிகளுக்கு சுயதொழில் தொடங்குவதற்கான மூலதனத்தை வழங்கினர்.