திருப்பூர் , டிச.30: தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு வாலிபாளையம் பகுதி திமுக , திருப்பூர் வடக்கு மாவட்ட திமுக மருத்துவர் அணி சார்பில் இலவச பொது மருத்துவ முகாம் நேற்று நடைபெற்றது. நொய்யல் வீதி மாநகராட்சி பள்ளி வளாகத்தில் வாலிபாளையம் பகுதி திமுக செயலாளர் மு க உசேன் தலைமையில் நடைபெற்ற முகாமை திருப்பூர் வடக்கு மாவட்ட செயலாளர் க.செல்வராஜ் எம்எல்ஏ துவக்கி வைத்தார். இந்த மருத்துவ முகாமில் திருப்பூர் தெற்கு மாநகர செயலாளர் டி கே டி நாகராசன் , தெற்கு சட்டமன்ற தொகுதி தேர்தல் பொறுப்பாளர் மாலதி நாகராஜன் , மாமன்ற உறுப்பினர்கள் பி.ஆர். செந்தில்குமார் , செந்தூர் முத்து , ராதாகிருஷ்ணன் , பொதுக்குழு உறுப்பினர் மஸ்ஊத், வார்டு செயலாளர்கள் முகமது அலி , ரஃபி , சல்மான் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
திருப்பூரில் இலவச பொது மருத்துவ முகாம்

Leave a comment
Weekly Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
- Advertisement -



Global Coronavirus Cases
Confirmed
0
Death
0
More Information:Covid-19 Statistics