கன்னியாகுமரி, நவ. 25:
குமரி மாவட்டம் அஞ்சுகிராமம் பேரூராட்சிக்கு உட்பட்ட ஜேம்ஸ் டவுண் எல் எம் எஸ் மேல்நிலைப்பள்ளியில் அஞ்சுகிராம் லயன்ஸ் சங்கம் மற்றும் பெஜான்சிங் கண் மருத்துவமனை சார்பில் இலவச கண் மருத்துவ சேவை முகாம் நடைபெற்றது.
முகாமிற்கு அஞ்சுகிராமம் அரிமாச்சங்க தலைவர் குமார் தங்கம் தலைமை தாங்கினார். எல்.எம்.எஸ் மேல்நிலைப்பள்ளி தாளாளர் வக்கீல் அன்பைய்யா மனுவேல், அரிமா சங்க செயலாளர் சந்திரசேகரன், பொருளாளர் ஜோஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முகம் ஒருங்கிணைப்பாளர் லயன் ஜோசப்சந்திரன் அனைவரையும் வரவேற்றார்.
அரிமா மாவட்ட ஆளுநர் லயன் எஸ்.எம்.ஜே சந்திரன் முகாமை தொடங்கி வைத்தார். இந்த முகாமில் அரிமா சங்க உறுப்பினர்கள் விஜயன், இன்னோசன்ட் ஜோசப் ராஜ், ராம்பிரபு, மணிவண்ணன், செல்வராஜ், தாவீது, சைமன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
இந்த முகாமில் கண் சம்பந்தப்பட்ட அனைத்து நோய்களுக்கும் இலவசமாக பரிசோதனை செய்யப்பட்டது இந்த முகாமில் ஏராளமான பொதுமக்கள் கலந்துகொண்டு பரிசோதனை செய்தனர். இதில் தேவையானவர்களுக்கு கண்ணாடிகள் மற்றும் சிகிச்சைகளும் வழங்கப்பட்டது.