திண்டுக்கல் ஜூலை :14
திண்டுக்கல் மாவட்டம், சாணார்பட்டி ஒன்றியத்தில் உள்ள கம்பிளியம்பட்டி பஞ்சாயத்தில் சில்ரன் சாரிடபிள் டிரஸ்ட் மற்றும் அரசன் கண் மருத்துவமனை சார்பாக இலவச கண் மருத்துவ முகாம் நடைபெற்றது. சில்ட்ரன் சாரிடபிள் ட்ரஸ்ட் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் திருப்பதி மற்றும் அரசன் கண் மருத்துவமனையின் மருத்துவர் ஹமஜடா, ஒருங்கிணைப்பாளர் விக்னேஷ்குமார் மற்றும் செவிலியர்கள் முன்னிலையில் முகாம் நடைபெற்றது. இதில் கம்பிளியம்பட்டி சுற்றுவட்டாரத்தை சேர்ந்த ஏராளமான பொது மக்களுக்கு கண் பார்வை குறைபாடு உள்ளவர்களுக்கு கண் பரிசோதிக்கப்பட்டது. இந்த இலவச முகாமில் கண்புரை, மாறுகண், நீர் அழுத்தம், இரத்த அழுத்தம், மாலைக்கண், நீர் வடிதல், தூரப்பார்வை, கிட்டப்பார்வை, சர்க்கரை அளவு, பரிசோதனைகள் நடைப்பெற்றது. இம்முகாமில் 54 நபர்கள் கலந்து கொண்டதில் மருத்துவர்கள் பரிசோதித்து அதில் 8 நபர்கள் மேல் சிகிச்சைக்காக கரூர் அரசன் கண் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அழைத்து செல்லப்பட்டவர்களுக்கு இலவச கண் அறுவை சிகிச்சை நடைபெற உள்ளது.