ஈரோடு ஜூன் 21
மறைந்த முதலமைச்சர் கருணாநிதியின் பிறந்தநாளை ஒட்டி ஈரோடு கருங்கல்பாளையம் பகுதியில் உள்ள 52, 53, 43 உள்பட நான்கு இடங்களில் 1000 மாணவ மாணவிகளுக்கு இலவச நோட்டு புத்தகம் மற்றும் எழுது பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி மண்டல தலைவரும் பகுதி செயலாளருமான குறிஞ்சி தண்டபாணி தலைமையில் நடந்தது
இதில் மேயர் நாகரத்தினம் சுப்பிரமணியம் கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். மாநகர செயலாளர் சுப்பிரமணியம், கவுன்சிலர் மேனகா நடேசன், வார்டு செயலாளர் வெள்ளி ரகு மற்றும் நிர்வாகிகள் பாலமுருகன், குட்டி, சசி, சண்முகம், ஜப்பான், முத்துப்பாண்டி,
குமரவேல், பொருளாளர் லக்கி கே பாஷா , மகேஸ்வரன், வக்கீல் அசோக் குமார், 43 வது வார்டு துணை செயலாளர் லதா, ஆவின் முருகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
நலத்திட்ட உதவிகளை வழங்கிய மேயர் நாகரத்தினத்தை 43 வது வார்டை சேர்ந்த ஐஸ்வர்யா அசோக் குமார் மாலை அணிவித்து வரவேற்றார்.