அரியலூர், ஆக;24
அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் நடைபெற்ற இளநிலை கல்வி, முதுநிலை கல்வி, பட்டயம் மற்றும் தொழிற்கல்வி பயிலும், சுயத்தொழில் புரியும் / தனியார் துறையில் பணிபுரியும் பார்வைத்திறன் பாதிக்கப்பட்டோர் மற்றும் செவித்திறன் பாதிக்கப்பட்ட மாற்றுத்;திறனாளிகளுக்கு விலையில்லா கைபேசி (SMART PHONE) பெறுவதற்கான முகாமில் முன்னுரிமையின் அடிப்படையில் மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா கைபேசியினை மாவட்ட ஆட்சித்தலைவர் பொ.இரத்தினசாமி வழங்கினார்.
அரியலூர் மாவட்டத்தில் 18 வயதிற்கு மேற்பட்ட 70 வயதிற்குட்பட்ட பட்டய படிப்பு, இளநிலை கல்வி பயிலும், சுயத்தொழில் புரியும் / தனியார்துறையில் பணிபுரியும் 80% முதல் 100% வரை பார்வைத்திறன் பாதிக்கப்பட்டோர் மற்றும் செவித்திறன் பாதிக்கப்பட்ட மாற்றுத்;திறனாளிகளுக்கு மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் கைபேசிகள் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறது. அதன் தொடர்ச்சியாக இன்றைய தினம் அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் நடைபெற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு விலையில்லா கைப்பேசிகள் வழங்கும் முகாமில் விலையில்லா கைப்பேசி வேண்டி விண்ணப்பித்த 44 மாற்றுத்திறனாளி நபர்களில் முன்னுரிமையின் அடிப்படையிலும், தகுதியின் அடிப்படையிலும் 03 மாற்றுத்திறனாளி கல்லூரி, மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா கைப்பேசியினை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார். முகாமில் கலந்துகொண்டு விண்ணப்பித்தவர்களில் தகுதியுடைய எவரும் விடுபடாமல் தேர்வு செய்ய மாவட்ட ஆட்சித்தலைவர் பொ.இரத்தினசாமி சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
அரியலூர் மாவட்ட செய்தியாளர் வினோத்குமார்