தருமபுரி செப் 30
தருமபுரி அடுத்த பைசு அள்ளியில் அமைந்துள்ள விஜய் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை மற்றும் கேன்சர் சென்டர் சார்பாக உலக இருதய தினத்தை முன்னிட்டு மாபெரும் இலவச மருத்துவ பரிசோதனை மற்றும் அறுவை சிகிச்சை ஆலோசனை முகாம் தர்மபுரியில் நடைபெற்றது. இம் முகம் மருத்துவமனையின் நிர்வாக இயக்குனர்கள் என். விஜய முருகன், எஸ். விஜயகுமார், ஆனந்த், சுபாஷ் ஆகியோர் மேற்பார்வையில் நடைபெற்றது. இம்மு முகாமில் பல்வேறு மருத்துவ துறை சார்ந்த மருத்துவர்கள் கலந்து கொண்டனர்.இரத்த கொதிப்பு, சர்க்கரை அளவு, புற்றுநோய், கல்லீரல் ,டயாலிஸ், சிறுநீரகம், எலும்பு முறிவு மற்றும் மூட்டு மாற்று அறுவை சிகிச்சை, மகப்பேறு, குழந்தைகள் நலம், காது, மூக்கு, தொண்டை ஆகிய மருத்துவ பரிசோதனைகள் செய்து பொதுமக்களுக்கு ஆலோசனைகளும் மருத்துவக் குழுவினர்களால் வழங்கப்பட்டது. இம்மு முகாமில் பொதுமக்கள் 700 பேர் கலந்து கொண்டனர். புதிதாக நோய் கண்டறியப்பட்டவர்கள் 242 பேர் முகாமில் கலந்து கொண்டவர்களுக்கு மருந்து,மாத்திரை இலவசமாக வழங்கப்பட்டது. இம்முகாமிற்கான ஏற்பாட்டை மருத்துவமனையைச் சார்ந்தவர்கள் சிறப்பாக செய்திருந்தனர்.