சென்னை
திருவள்ளூர் நெடுஞ்சாலையில் அமைந்துள்ள காமராஜர் திருமண மண்டபத்தில் முன்னாள் முதல்வர் காமராஜர் 122 வது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு
ரெட்டில்ஸ் வட்டார நாடார் ஐக்கிய சங்கம் மற்றும் சென்னை அரவிந்த் கண் மருத்துவமனை மற்றும் பார்வை இழப்பு தடுப்பு சங்கம் இணைந்து இலவச கண் பரிசோதனை மற்றும் கண் புரை அறுவை சிகிச்சை முகாம் நடைபெற்றது.
இந்த முகாமில் கண் சிகிச்சைக்காக பொதுமக்கள் சுமார் 600 க்கும் மேற்பட்டோருக்கு இலவச கண்ணாடி 450 உடனுக்குடன் பரிசோதித்து கண்ணாடி வழங்கப்பட்டது. இதில் கண் சம்பந்தமான பரிசோதனை செய்யப்பட்டு ஆபரேஷன் 300 க்கும் மேற்பட்டோருக்கு அளிக்கப்படுகிறது.
அதனைத் தொடர்ந்து நிகழ்வில் 15 அரசு பள்ளிகளுக்கு பயன்படும் வகையில் பத்தாம் வகுப்பு 12ஆம் வகுப்பில் முதல் மதிப்பெண் இரண்டாம் மதிப்பெண் மூன்றாம் மதிப்பெண் பெற்ற மாணவ மாணவிகளுக்கு ஊக்கத்தொகை வழங்கப்பட்டது.
இவ்விழாவில் சிறப்பு அழைப்பாளர்கள் நாறவாரி குப்பம் தேர்வு நிலை பேரூராட்சி தலைவர் கே.தமிழரசி குமார், செங்குன்றம் சரகம் காவல் உதவி ஆணையர் ஆர்.ராஜா ராபர்ட் திருவள்ளூர் மாவட்டம் முதன்மை கல்வி அலுவலர் பி.ரவிச்சந்திரன், பாடியநல்லூர் முதல் நிலை ஊராட்சி தலைவர் என்.ஜெயலட்சுமி நடராஜன், செங்குன்றம் காவல் நிலைய ஆய்வாளர் ஜி. புருஷோத்தமன், நல்லாசிரியர் விருது பெற்ற தலைமை ஆசிரியர் (ஓய்வு)
பி.ஜான்சன் கென்னடி ஆகியோர் பங்கேற்றனர்.முன்னதாக ரெட்டில்ஸ் வட்டார நாடார் ஐக்கிய சங்க ஆலோசகர் ஆர்.குணப்பாண்டியன் நாடார், தலைவர் எ.சிற்றம்பல நாடார், செயலாளர் ஆர்.சீனிவாசன் நாடார் பொருளாளர் ஜி.பழனிசாமி நாடார் ஆகியோர்
வருகை தந்த அனைவரையும் வரவேற்று சிறப்பித்தனர்.