தஞ்சாவூர். அக்.23
தஞ்சாவூர் கோடியம்மன் கோவிலில் 16 ஏழை ஜோடிகளுக்கு இலவச திருமணத்தை எம்எல்ஏக்கள் மேயர் நடத்தி வைத்தனர்.
இந்து சமய அறநிலையத்துறை யின் சார்பில் கோவில்களில் ஆண்டுதோறும் ஏழை எளிய ஜோடிகளுக்கு இலவச திருமணம் நடத்தி வைக்கப்படும். இதற்கான செலவுகளை கோவில் நிர்வாகமே ஏற்கும் என்று முதலமைச்சர் மு க ஸ்டாலின் அறிவித்து இருந்தார் அதன்படி இந்து சமய அறநிலை துறை சார்பில் கடந்த 2022 ஆம் ஆண்டு முதல் கோயில்களில் திருமணம் நடத்தி வைக்கப்பட்டு வருகிறது .அதன்படி இந்த ஆண்டு தமிழகத்தில் உள்ள பல்வேறு கோவில்களில் 700 ஏழை எளிய ஜோடிகளுக்கு திருமணம் நடத்தி வைக்கப்பட்டது. தஞ்சாவூரில் உள்ள கோடியம்மன் கோவிலில் இந்த திருமணம் நடைபெற்றது
தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள பல்வேறு பகுதிகளில் இருந்து 16 ஏழை ஜோடிகள் தேர்வு செய்யப் பட்டு திருமணம் நடத்தி வைக்கப் பட்டது .திருமணத்தை எம்எல்ஏக் கள் துரை சந்திரசேகரன், டி கே ஜி நீலமேகம், மேயர் சண். ராமநாதன் துணை மேயர் டாக்டர் அஞ்சுகம் பூபதி, அரண்மனை தேவஸ்தான பரம்பரை அறங்காவலர் பாபாஜி ராஜா போன்ஸ்லே ஆகியோர் திருமணத்தை நடத்தி வைத்தனர்.
விழாவில் மணமக்களுக்கு 4 கிராம் தங்கத்தாலி, புத்தாடை, மிக்ஸி, பீரோ, கட்டில், கைக்கடிகாரம், மெத்தை பாத்திரங்கள் உள்பட பல்வேறு வகையான சீர்வரிசை பொருள்கள் சீதனமாக வழங்கப்பட்டன. . திருமண விழாவில் இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் மணமக்களின் பெற்றோர்கள் உறவினர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்