வேலூர் 06
வேலூர் மாவட்டம், காட்பாடி தாலுக்கா, ஓடைபிள்ளையார் கோயில் அருகில் இந்தியன் ஆயில் பெட்ரோல் பங்க், லாரி உரிமையாளர்கள் சங்க அலுவலக அரங்கில், வேலூர் கோட்டை ரோட்டரி சங்கம், வேலூர் லாரி உரிமையாளர்கள் சங்கம் மற்றும் தமிழ்நாடு கிட்னி ஆராய்ச்சி மையம் பவுண்டேஷன் இணைந்து நடத்திய இலவச சிறுநீரக பரிசோதனை மற்றும் ஆலோசனை முகாம் வேலூர் லாரி உரிமையாளர்கள் சங்கத் தலைவர் எஸ்.லோகநாதன் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு சிறுநீரக ஆராய்ச்சி ஃபவுண்டேஷன் சிறப்பு மருத்துவர் டாக்டர்.ராஜலட்சுமி ரவி, கிட்னி பவுண்டேஷன் குழுவினர் மற்றும் விமல் நர்சிங் கல்லூரி செவிலியர்கள்
இம்முகாமில் லாரி உரிமையாளர்கள் சங்க செயலாளர் ராமு மற்றும் வேலூர் கோட்டை ரோட்டரி சங்க தலைவர் பி.ஆர்.விக்ரம், செயலாளர் சந்தோஷ், வேலூர் கோட்டை ரோட்ரி சங்க ஆளுநர் ஸ்ரீதர், பலராமன், முன்னாள் தலைவர்கள் சீனிவாச ரெட்டி மற்றும் தமிழ்நாடு கிட்னி ஆராய்ச்சி பவுண்டேஷன் மருத்துவர்கள் நிர்வாகிகள், பலர் கலந்து கொண்டனர் . இந்த மருத்துவ முகாமில் சுமார் 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர் .