கள்ளக்குறிச்சி .
கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் ஒன்றியம் தொட்டியம் கிராமத்தில் ஏபிஜே.அப்துல் கலாம் அவர்களின் 93-வது பிறந்த நாளை முன்னிட்டு
ஏபிஜே.அப்துல் கலாம் பசுமை அறக்கட்டளையின் நிறுவனத்தலைவர் சிலம்பரசன் மற்றும் துணை நிறுவனர் தேவராஜ் இவர்களின் வழிகாட்டுதலின்படி ஏபிஜே அப்துல் கலாம் பசுமை அறக்கட்டளை சார்பாக இலவச கலாம் கல்வி மையம் துவங்கப்பட்டது. மாவட்ட தலைவர் தமிழ் மாறன் தலைமை தாங்கினார். இந்நிகழ்ச்சியில் உடற்கல்வி ஆசிரியர்கள் சாமிதுரை மற்றும் தனபால் வரவேற்புரை ஆற்றினார்கள். தொட்டியம் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் சிவகாமி கோவிந்தராஜ், ஊராட்சி செயலாளர் துரை மற்றும் தொட்டியம் அ.மே.நி.பள்ளி பெற்றோர்கள் சங்கத் தலைவர் விஜயன் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக அதிமுக கிளை செயலாளர் காசி, அதிமுக ஒன்றிய பாசறை செயலாளர் கோவிந்தன், நாம் தமிழர் கட்சி சின்னசேலம் ஒன்றிய செயலாளர்கள் சத்யராஜ், கருப்பையா, குமரேசன் தமிழ்நாடு சிறப்பு காவல் படை கோவைப்புதூர், பிரகாஷ் தமிழ்நாடு சிறப்பு காவல்படை உளுந்தூர்பேட்டை இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் சங்கராபுரம் ஒன்றிய பொருளாளர் ராஜ்குமார் மற்றும் சமூக ஆர்வலர்கள் குமார், சக்திவேல், ராஜா, செந்தில், வெங்கடேசன், அபிமன்யுசங்கர், மணிகண்டன் ஆகியோர் கலந்து கொண்டனர். கள்ளக்குறிச்சி மாவட்ட செயலாளர்கள் அய்யனார் , கிருஷ்ணகுமார் மாவட்ட துணைத் தலைவர் மணிகண்டன் கலாம் இலவச கல்வி மையம் ஆசிரியர்கள் திவ்யா, பிரியா மற்றும் சந்தியா ஆகியோர் நன்றி தெரிவித்தனர். நிறைவாக குழந்தைகளுக்கு நோட்டு, புத்தகம், பேனா, பென்சில் போன்ற பொருட்கள் வழங்கப்பட்டது.
செய்தி தகவல். கள்ளக்குறிச்சி தமிழ்மாறன் .