டாக்டர் பாலாஜி ஸ்ரீ முருகன், மேலாளர் பிரம்மசாரினி லட்சுமி தகவல்
ராமநாதபுரம், ஆக.9-
கொச்சி அமிர்தா மருத்துவமனை குழந்தைகள் இருதயக்குழு ஜெனிசிஸ் அறக்கட்டளை மற்றும் அமிர்தா ஹார்ட் கேர் அறக்கட்டளை இணைந்து ராமநாதபுரம் ஆர்.எஸ்.மடை அமிர்தா வித்யாலயா பள்ளியில் இதய நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு இலவச மருத்துவ முகாம் நடத்த உள்ளனர்.
இதுகுறித்து அமிர்தா வித்யாலயா பள்ளிகளின் மேலாளர் பிரம்மசாரினி லட்சுமி மற்றும் பிறவி இருதய அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் பாலாஜி ஸ்ரீ முருகன் ஆகியோர் ராமநாதபுரத்தில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
ராமநாதபுரம் மாவட்டம் ராமநாதபுரம் அருகே ஆர் எஸ் மடையில் உள்ள அமிர்தா வித்யாலயா பள்ளியில் ஆகஸ்ட் 31ஆம் தேதி குழந்தைகள் இருதய சிகிச்சை குழுவினர் இலவச பரிசோதனை முகாம் நடத்த உள்ளனர். கொச்சியில் உள்ள அமிர்தா மருத்துவமனையைச் சேர்ந்த டாக்டர்கள் குழுவினர் பங்கேற்று முகாமில் கலந்து கொள்ளும் அனைத்து குழந்தைகளுக்கும் இலவச நோய் அறிதல் மதிப்பீடு செய்ய உள்ளனர்.
கடந்த ஆண்டு இராமநாதபுரத்தில் நடத்தப்பட்ட முகாமில் சுமார் 300 பங்கேற்பாளர்கள் கலந்து கொண்டதில் 30 குழந்தைகள் இலவச இருதய அறுவை சிகிச்சை பெற்று பூரண குணமடைந்து உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இருதய அறிவை சிகிச்சை அல்லது கதீட்டர் செயல்முறைகள் தேவை என அடையாளம் காணப்பட்டவர்கள் கொச்சியில் உள்ள அமிர்தா மருத்துவமனையில் இலவச சிகிச்சை பெறுவார்கள். ஜெனிசிஸ் அறக்கட்டளை மற்றும் அமிர்தா ஹார்ட்கேர் அறக்கட்டளை மூலம் இலவச அறுவை சிகிச்சைக்கான நிதிகள் வழங்கப்படுகிறது.
பிறவி இருதய அறுவை சிகிச்சை குறித்து ராமநாதபுரம் மாவட்டத்தில் 70 கிராமங்களுக்கு மேல் நேரில் சென்று மக்களை சந்தித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி முகாமில் கலந்து கொள்ள அறிவுறுத்தி உள்ளோம். வரும் ஆகஸ்ட் 31ஆம் தேதி நடைபெறும் இருதய அறுவை சிகிச்சை குறித்த சிறப்பு முகாமில் கலந்து கொள்ள பதிவு செய்ய வேண்டிய தொலைபேசி எண் 8921508515
முகாமில் கலந்து கொள்ள வருபவர்கள் ராமநாதபுரம் பஸ் ஸ்டாண்ட் மற்றும் ரயில் நிலையத்திலிருந்து முகாம் நடைபெறும் இடத்திற்கு வருவதற்கு இலவச பஸ் வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதற்கு முன்பாக விருதுநகர் நாகர்கோயில் மற்றும் திருச்சியில் மிகச் சிறப்பாக இது போன்ற முகாம்கள் நடத்தப்பட்டுள்ளன. இருதய அறுவை சிகிச்சை தொடர்பான வெற்றிகரமான முகாம்களைத் தொடர்ந்து ராமநாதபுரம் மற்றும் அருகில் உள்ள மாவட்டங்களான சிவகங்கை புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்ட மக்களும் இப் முகாமை பயன்படுத்தி கொள்ள வேண்டும். இது போன்ற முகாம்கள் தமிழகத்தில் மேலும் பல மாவட்டங்களில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
பிறவி இருதய குறைபாடுகள் இந்தியாவில் ஒரு குறிப்பிடத்தக்க சவாலாக உள்ளது. ஆண்டுதோறும் 2.5 லட்சம் மேற்பட்ட குழந்தைகள் இந்த குறைபாடுகளுடன் பிறக்கிறார்கள். அவர்களின் முதல் ஆண்டில் 25 சதவீதம் பேக் தேவையான மருந்து பராமரிப்புக்கான அணுக்கள் ஆதாரங்களின் பற்றாக்குறை விழிப்புணர்வின்மை மற்றும் நிதி சுமை போன்ற காரணிகளால் சிகிச்சை தடைபட்டு வருகிறது. இதை கருத்தில் கொண்டு கொச்சியில் உள்ள அமிர்தா மருத்துவமனையில் உள்ள குழந்தைகளுக்கான இருதய அறுவை சிகிச்சை திட்டம் இதய நோயால் பாதிக்கப்பட்ட ஒவ்வொரு குழந்தைகளுக்கும் மலிவு மற்றும் அணுகக்கூடிய சிகிச்சை எளிமையாக வழங்க அர்பணிக்கப்பட்டுள்ளது. கடந்த 25 ஆண்டுகளில் அமிர்தா மருத்துவமனை ஏறக்குறைய 32500 குழந்தைகளுக்கு இதய அறுவை சிகிச்சைகள் மற்றும் வடிகலாய் பீட்டர் சிகிச்சைகளை செய்துள்ளனர். 24300 குழந்தைகள் இலவச அல்லது மலிவு கட்டணத்துடன் கூடிய சிகிச்சையை பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது ராமநாதபுரம் மாவட்டம் ஆர் எஸ் மடை அமிர்தா வித்யாலயம் பள்ளியில் ஆகஸ்ட் 31ஆம் தேதி நடைபெறும் இலவச முகாமில் கலந்து கொண்டு பயன்பெறுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
இவ்வாறு கூறினர்.
பள்ளி முதல்வர் இந்திரா தேவி முன்னதாக வரவேற்புரை ஆற்றி அமிர்தா மருத்துவமனை ராமநாதபுரம் மாவட்டத்தில் கிராமங்கள் தூறும் சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தியவை குறித்து விளக்கி கூறினார்.