வேலூர்=09
வி.ஐ.டி துணைத் தலைவர் ஜி.வி. செல்வம் பிறந்தநாள் விழாவையொட்டி தலைமுறை பேரவை சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கான இலவச முடி திருத்தும் நிலையம் வேலூர் பழைய மீன் மார்க்கெட் அருகில் அமைக்கப்பட்டது. இதன் திறப்பு விழா இன்று காலை நடந்தது. நிகழ்ச்சிக்கு வி.ஐ.டி துணைத்தலைவரும், வேலூர் சர்வதேச பள்ளி தலைவருமான ஜி.வி.செல்வம் தலைமை தாங்கி இலவச முடி திருத்தும் நிலையத்தை திறந்து வைத்தார்.
வேலூர் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சு. சரவணன் முன்னிலை வகித்தார்.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை தலைமுறை பேரவை நிர்வாகிகள் எம். சீனிவாசன், வழக்கறிஞர் பி.டி.கே. மாறன், பா. பூமிநாதன், கே.எஸ்.சுந்தர், வி. சீனிவாசன், கே.சதீஷ் ஆகியோர் செய்திருந்தனர்.
இந்தியாவில் மாற்றுத்திறனாளிகளுக்கான இலவச முடி திருத்தும் முதல் நிலையம் இது என்பது குறிப்பிடத்தக்கது.