வேலூர் 23
வேலூர் மாவட்டம், தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் மற்றும் மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம் வேலூர் சிஎம்சி கண் மருத்துவமனை இணைந்து நடத்திய இலவச கண் சிகிச்சை முகாம் மசூதி வீதி ஹீரா மன்ஜில் கொணவட்டத்தில் நடைபெற்றது இதில் கிட்ட பார்வை, தூர பார்வை , ஆகியவற்றுக்கான பரிசோதனைகள் மேற்கொண்டு ஆலோசனைகள் வழங்கினர். இதில் தலைவர் நாசர், செயலாளர் அப்துல் ரஹ்மான், பொருளாளர் ஷரீஃப், மாவட்ட மருத்துவர் அணி அபுல் உசேன் ,கரீம் , சிஎம்சி கண் மருத்துவமனை முகாம் ஒருங்கிணைப்பாளர் ஹிட்லர் மற்றும் மருத்துவர்கள் செவிலியர்கள் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் கொணவட்டம் கிளை நிர்வாகிகள், பொதுமக்கள் ,பலர் கலந்து கொண்டனர்.