சிவகங்கை, ஜுலை 23-
சிவகங்கை நகர தமுமுக மதுரை அரவிந்த் கண் மருத்துவமனை இணைந்து நடத்திய மாபெரும் சர்க்கரை நோயாளிகளுக்கான இலவச கண் சிகிச்சை முகாம் நடைபெற்றது.
சிவகங்கை நேரு பஜார் இல் அமைந்துள்ள ஆர்.சி.நடுநிலை பள்ளியில் நடைபெற்றது. இந்த முகாமிற்கு சிவகங்கை நகர தலைவர் சித்திக் தலைமை வகித்தார். தமுமுக மாவட்ட செயலாளர் அப்துல் முத்தலிவு முன்னிலை வகித்தார். இம்முகாமை சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர் பாரூக் துவக்கிவைத்தார். சிறப்பு அழைப்பாளர்களாக தமுமுக மாநில செயலாளர் தொண்டி சாதிக்பாட்ஷா தமுமுக மாவட்ட தலைவர் துல்கருணைசேட் சிவகங்கை வாலாஜாநவாப் ஜும்மா பள்ளிவாசல் தலைவர் காஜாமைதீன், செயலாளர் முகமது அலி மற்றும் ஹவ்வா பள்ளிவாசல் தலைவர் தாஜிதீன் மகிளா காங்கிரஸ் மாநில துணைத்தலைவி வித்யா கணபதி மற்றும் சிவகங்கை மறைவட்ட அதிபர் ஜேசுராஜ், சிவகங்கை ஆர் சி நடுநிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியர் ஜான் பிரிட்டோ, சிவகங்கை திமுக நகர் மன்ற உறுப்பினர் அயூப்கான், திமுக நகர்மன்ற உறுப்பினர் ராஜபாண்டியன் கலந்துகொண்டனர். மேலும் சிவகங்கை நகர் நிர்வாகிகள் மன்சூர், ரசாக், அக்பர்அலி மருத்துவர் அணி செயலாளர் ஷாஜஹான் முன்னாள் மாவட்ட மருத்துவரணி செயலாளர் சேக் பகுரூதீன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். இந்த முகாமில் பொதுமக்கள் 210க்கும் மேற்பட்டோர் பயனடைந்தனர்.