திண்டுக்கல் காஸ்மாஸ் லயன்ஸ் சங்கத்தின் சார்பாக இலவச கண் மருத்துவமனை முகாம்.
திண்டுக்கல் ஸ்டார் கிட்ஸ் குழந்தைகள் மருத்துவமனை, திண்டுக்கல் காஸ்மாஸ் லயன்ஸ் சங்கம், மதுரை அரவிந்த் கண் மருத்துவமனை மற்றும் முத்தழகுப்பட்டி ஊர் நிர்வாகம் இணைந்து மாவட்ட பார்வை இழப்பு தடுப்புச் சங்க நிதி உதவியுடன் நடத்திய இலவச கண் பரிசோதனை முகாம் நிகழ்ச்சி திண்டுக்கல் முத்தழகுபட்டியில் உள்ள புனித அந்தோணியார் ஆலய வளாகத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு திண்டுக்கல் மாவட்ட மேதகு ஆயர் பி.தாமஸ் பால்சாமி தலைமை தாங்கினார். முத்தழகுபட்டி
ஊர் பங்குத்தந்தை எஸ். அமலதாஸ் , ஊர் பெரியதனக்காரர்கள் மற்றும் டிரஸ்ட் மெம்பர்கள், முத்தழகுப்பட்டி புனித பிரான்சிஸ் சேவியர் மேல்நிலைப்பள்ளி தாளாளர்
அருட்சகோதரி எல். சகாயமேரி, முத்தழகுபட்டி ஊர் நாட்டாண்மை ஆர். ஜெயராஜ், ஊர் சேர்வை ஜெ. நோவா அமலநாதன், ஊர் மணியக்காரர் எஸ். பாஸ்கர் விஜய் ஆனந்த், ஊர் பொருளாளர் எஸ். ஆனந்த தர்மராஜ், ஊர் செயலாளர் ஆர். ஞானசேகர், முத்தழகுபட்டி உதவிச் செயலாளர் ஆசிரியர் எஸ். ஜெரோம் அருள் ராயன்,
முத்தழகுபட்டி வார்டு செயலாளர் அஇஅதிமுக ஜான்பீட்டர், திண்டுக்கல் காஸ்மாஸ் லயன்ஸ் சங்கத்தின் தலைவர் எஸ். விஜயகுமார், செயலாளர்கள் லியோ, கே. முத்துக்குமார், பொருளாளர் எஸ். சையது சுரஜ் ஆகியோர் முன்னிலை வகித்தார்கள். தலைமை சிறப்பு விருந்தினராக திண்டுக்கல் மாநகராட்சி எதிர்க்கட்சித் தலைவர் ராஜ்மோகன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். திண்டுக்கல் காஸ்மாஸ் லயன்ஸ் சங்கத்தின் புரவலர் எம். திபூர்சியஸ், காஸ்மாஸ் லயன்ஸ் சங்கத்தின் முன்னாள் தலைவர் டாக்டர்.ஜெ. அமலா தேவி, திண்டுக்கல் ஸ்ரீ அமோகம் மருத்துவமனை இயக்குனர் டாக்டர். ஜெ.செல்வராணி, மதுரை அரவிந்த் கண் மருத்துவமனை முகாம் அமைப்பாளர் ஜி.ரமேஷ் ஆகியோர் கலந்து கொண்டு வாழ்த்துரையாற்றினார்கள். மதுரை அரவிந்த் கண் மருத்துவமனை மருத்துவர்கள் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு கண்புரை, சர்க்கரை நோய், கண்நீர் அழுத்த நோய், குழந்தைகளின் கண் நோய் ,கிட்டப் பார்வை, தூரப்பார்வை ஆகியவை பரிசோதிக்கப்பட்டன. இதில் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு பயன் பெற்றனர். இந்நிகழ்வில் காஸ்மாஸ் லயன்ஸ் சங்கத்தின் நிர்வாகிகள் P.வேலவன்,
A.L.X டேவிட்ராஜ்,
Dr.N.S.A.ஜெய ஆரோக்கிய செல்வன்,
சதீஷ்குமார்,
செபா மாஸ்டர்,ஷேக்ஸ் ராஜ், குணவதி ஆகியோர் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியின் போது முன்னாள் காஸ்மாஸ் லயன்ஸ் சங்கத்தின் நிர்வாகி ஸ்ரீகாந்த் கலந்து கொண்டு இலவச கண் பரிசோதனை முகாமில் பணி செய்த செவிலியர்களுக்கு நினைவு பரிசை வழங்கினார். இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை திண்டுக்கல் காஸ்மாஸ் லயன்ஸ் சங்கத்தின் மாவட்ட தலைவர் என். தனுஷ்கோடி, முத்தழகுபட்டி
அஇஅதிமுக மேற்குப் பகுதி பிரதிநிதி ராஜப்பா (எ) எஸ். சேசுராஜ் ஆகியோர் சிறப்பாக நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தார்கள்.