திண்டுக்கல்
ஜூலை :25
திண்டுக்கல் மேட்டுப்பட்டியில் உள்ள புனித பிலோமினாள் நடுநிலைப் பள்ளியில் திண்டுக்கல் காஸ்மாஸ் லயன்ஸ் சங்கம் மற்றும் மதுரை அரவிந்த் கண் மருத்துவமனையும் இணைந்து மாவட்ட பார்வை இழப்புத் தடுப்புச் சங்க நிதி உதவியுடன் நடைபெற்ற இலவச கண் பரிசோதனை முகாமிற்கு திண்டுக்கல் காஸ்மாஸ் லயன்ஸ் சங்க தலைவர் எஸ். விஜயகுமார் தலைமை தாங்கினார். இந்நிகழ்ச்சியில் சங்க செயலாளர்கள் எ.லியோ (நிர்வாகம் ), கே.முத்துக்குமார் (செயல்பாடுகள்) , பொருளாளர் எஸ்.சையதுசூரஜ் ஆகியோர் முன்னிலை வகித்தார்கள். முன்னாள் அமைச்சர் சீனிவாசன், காஸ்மாஸ் சங்க புரவலர் எம்.திபூர்சியஸ், மேட்டுப்பட்டி பங்குத்தந்தை
வி.செல்வராஜ், திருவருட் பேரவை துணைதலைவர் முகமதுயூசுப் அன்சாரி, திமுக ஒன்றிய செயலாளர் எம்.வெள்ளிமலை,புனித பிலோமினாள் நடுநிலைப்பள்ளி யின் தாளாளர் அருட் சகோதரி எஸ்.ஆரோக்கியசெல்வி, தலைமை ஆசிரியை அருட் சகோதரி கரோலின்மேரி, ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு இலவச கண் பரிசோதனை முகாமை தொடங்கி வைத்தார்கள். திண்டுக்கல் கருப்பட்டி கடை உரிமையாளர்கள் எம்.கிருஷ்ணகுமார், கே.சக்திகுமார் ஆகியோர் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்கள். நிகழ்ச்சியில் சேவை திட்டங்களை ஐ.தனராஜ் நிறைவேற்றினார். இந்நிகழ்ச்சியில் என்.ஸ்ரீகாந்த்,
ஆ.செபாமாஸ்டர்,உள்பட பலர் கலந்து கொண்டனர்.