ராமநாதபுரம், பிப். 23-
தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் நம்புதாளை கிளை மதுரை அரவிந்த் கண் மருத்துவமனை சாய் வித்யா கிளினிக் நம்புதாளை இணைந்து நடத்தும் சர்க்கரை நோயாளிகளுக்கான இலவச கண் பரிசோதனை முகாம் மற்றும் தோல் பெண்கள் நல மருத்துவ முகாம் நம்புதாளை அரசு சமுதாய நலக் கூடத்தில் நடந்தது.
இலவச கண் பரிசோதனை முகாமில்
தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் மாவட்ட துணைத் தலைவர் சாகுல் ஹமீது தலைமை வகித்தார். தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் கிளை தலைவர் எஸ் சேகு நைனா வரவேற்புரை ஆற்றினார்.
கண் சிகிச்சை முகாம் மற்றும் மருத்துவ முகாமை தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகத்தின் மாநில செயலாளர் தொண்டி சாதிக் பாட்ஷா தொடங்கி வைத்தார்.
மனிதநேய மக்கள் கட்சியின் மாவட்ட துணைச் செயலாளர் கவுன்சிலர் பெரியசாமி, நம்புதாளை நிகமத்துல்லாஹ் ஊடக அணி மாவட்ட செயலாளர் பகுருல்லா,
மாவட்ட தொண்டர் அணி பொருளாளர் அசன், உலமாக்கள் அணி மாவட்ட துணைச் செயலாளர் முகமது ஆசாத், ஒன்றிய பொறுப்பாளர் மாஸ் சகுபர் , ஜபருல்லா ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். அரவிந்த் கண் மருத்துவமனையின் மருத்துவர்கள் டாக்டர் ஜீவா, டாக்டர் ஷிரோயஸ், சாய் வித்யா கிளினிக் மருத்துவர் பிரித்தி மோனிகா தோல் பெண்கள் நல மருத்துவர் கலந்து கொண்டு சிகிச்சை அளித்தனர். முகாமில் 200 க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கண் சம்பந்தப்பட்ட நோயாளிகள் தோல் மற்றும் பொது மருத்துவம் சம்பந்தப்பட்டவர்க பரிசோதனை செய்து பயன்பெற்றனர். அரவிந்த் கண் மருத்துவமனையின் இருபதுக்கும் மேற்பட்ட செவிலியர்கள் மருத்துவப் பணியில் தங்களை ஈடுபடுத்திக் கொண்டனர். அரவிந்த் கண் மருத்துவமனையின் ஒருங்கிணைப்பாளர் ராஜசேகர் கலந்துகொண்டு ஒருங்கிணைத்தார். மருத்துவ முகாம் ஏற்பாடுகளை ஒருங்கிணைப்பாளர்கள் தொண்டி காதர் பரக்கத் அலி முகமது மைதீன் அலாவுதீன் ரிஸ்வான் சலீம் அப்துல்லா ஜலால் சேனா யாசிர் அரபாத் நம்பதாளை அகமது சதாம் உசேன்
இம்ரான் கான் முஷரப் ஆப்கான்
ரைஸ் அஹமது முப்ரின் ஹபிப் ரஹ்மான்
சேகு அலி சேக் அப்துல்லா பாசித் இஸ்மத் இக்வான் ஆகியோர் சிறப்பாக செய்திருந்தனர். தமுமுக நம்புதாளை நகர் செயலாளர் ஜாசிர் நன்றி கூறினார்.