சேலம், மார்ச்.1-
சேலம் கொண்டலாம்பட்டி ரவுண்டானா அருகில் உள்ள சேலம் விஜய் மருத்துவமனையில் பிப்ரவரி 23ம் தேதி முதல் மார்ச் மாதம் 31ம் தேதி வரை இலவச சர்க்கரை நோய் மருத்துவ முகாம் நடக்கிறது.
இதுகுறித்து விஜய் மருத்துவமனை மகளிர் மற்றும் மகப்பேறு சிறப்பு மருத்துவர் கலைச்செல்வி கூறியதாவது:
சேலம் கொண்டலாம்பட்டி ரவுண்டானா அருகில் உள்ள விஜய் மருத்துவமனையில் நீண்ட நாள் சர்க்கரை நோயாளிகள் பயன்பெறும் வகையில், இலவச மருத்துவ முகாம் நடைபெற்று வருகிறது. வருகிற மார்ச் 31ம் தேதி வரை தினமும் காலை 7 மணி முதல் மதியம் 2 மணி வரை நடைபெறும் இந்த முகாமில் சர்க்கரை அளவீடு, சிறுநீரக பரிசோதனை, இருதய பரிசோதனை, கால் நரம்பு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு ஆலோசனை வழங்கப்படுகிறது. எனவே நீண்ட நாள் சர்க்கரை நோயாளிகள் இந்த வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ள வேண்டுகிறோம்.
மேலும் நமது விஜய் மருத்துவமனையில், சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஆணுறுப்பு முன்தோல் இறுக்கம் (சுன்னத்) அறுவை சிகிச்சை ரூ.9 ஆயிரம் முதல் செய்யப்படுகிறது. அதேபோல் கர்ப்பிணி பெண்களுக்கு அனாமலி ஸ்கேன். என்டி ஸ்கேன், எக்கோ ஸ்கேன் உள்ளிட்ட அனைத்து விதமான ஸ்கேன் பரிசோதனைகளும் வருகிற மே மாதம் 31ம் தேதி வரை இலவசமாக பார்க்கப்படுகிறது. பொது மருத்துவம் அனைத்து நாட்களிலும் நோயாளிகள் மிக குறைந்த கட்டணத்தில் நிறைவான மருத்துவ சேவையை பெறும் வகையில் விஜய் மருத்துவமனை செயல்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.
அப்போது விஜய் மருத்துவமனை மேலாளர் ராஜா, பொது மேலாளர் அருள்குமார் மற்றும் மருத்துவர்கள் உடனிருந்தனர்.