வேலூர்-01
வேலூர் மாவட்டம் .வேலூர் கஸ்பா ஜி.எஸ். மருத்துவமனையில் குழந்தையின்மைக்கான சிறப்பு இலவச ஆலோசனை முகாம் ஜி .எஸ். மருத்துவமனை மற்றும் ஐஸ்வர்யா கருத்தரித்தல் மையம் இணைந்து நடத்தினர் .இதில் ஜி. எஸ் மருத்துவமனை பொதுநலம் மற்றும் மகளிர் நல மருத்துவர் டாக்டர் எஸ். சாந்தகுமாரி, கருத்தரிப்பு மற்றும் மகப்பேறு மகளிர் நல மருத்துவர் டாக்டர். விஸ்வஜா, மற்றும் ஐஸ்வர்யா கருத்தரித்தல் மையம் மருத்துவர் ராகப்பிரியா ஆகியோர் குழந்தையின்மைக்கான ஆலோசனைகளை பொதுமக்களுக்கு வழங்கினர். இதில் மருத்துவர்கள், செவிலியர்கள் ,பொதுமக்கள், பலர் கலந்து கொண்டனர்.