திருப்பூர் ஜூலை:
28
அர் ரஹ்மான் சேவைக்குழு அறக்கட்டளை சார்பில் இலவச கம்ப்யூட்டர் பயிற்சி மைய திறப்பு விழா காதர்பேட்டையில் நடைபெற்றது. இதற்கு அறக்கட்டளை தலைவர் சலீம் தலைமை தாங்கி பேசினார். இதனை செல்வராஜ் எம்.எல்.ஏ. திறந்து வைத்தார்.
இதில் மாநகராட்சி மேயர் தினேஷ்குமார், தெற்கு மாநகர செயலாளர் டி.கே.டி.மு.நாகராசன் மற்றும் அறக்கட்டளை நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர். அறக்கட்டளையால் இலவசமாக பயிற்சி வழங்கப்பட உள்ளது. இதனை மாணவிகள் பயன்படுத்திக்கொண்டு பயன்பெறலாம் என அறக்கட்டளை நிர்வாகிகள் தெரிவித்தனர்.