கன்னியாகுமரி செப் 24
கமரி மாவட்டம் தென்தாமரைகுளம் எல்.எம்.எஸ் மேல்நிலை பள்ளியில் இலவச சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு பள்ளி தாளாளர் கால்வின் தலைமைதாங்கினார். பேரூராட்சி தலைவி கார்த்திகா பிரதாப், பள்ளி தலைமை ஆசிரியை பிரீத்தா ஆகியோர் முன்னிலை வகித்தனர். .நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட அகஸ்தீஸ்வரம் தெற்கு ஒன்றிய திமுக செயலாளர் பாபு 36 மாணவ மாணவிகளுக்கு இலவச சைக்கிள்களை வழங்கினார்.நிகழ்ச்சியில் பள்ளி முன்னாள் தாளாளர் அருள்ஞான பெல், சபை பரிபாலன குழு உறுப்பினர் பெனி ஜோசப், சபைக் குழு உறுப்பினர் அருள், தென் தாமரைக்குளம் பேரூராட்சி துணைத் தலைவர் மல்லிகா,கவுன்சிலர்கள் எட்வின்ராஜ், பூவியூர் காமராஜ்,ஆல்வின் மற்றும் திமுக நிர்வாகி தாமரை பிரதாப், தமிழன் ஜானி, அகஸ்தியலிங்கம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.