இளையான்குடி செப்:13
சிவகங்கை மாவட்டம் இளையான்குடி வட்டம் சாத்தனூர் மற்றும் சாலைகிராம மேல்நிலைப் பள்ளிகளில் சுமார் 200 க்கும் மேற்பட்ட விலையில்லா மிதிவண்டிகளை சட்டமன்ற உறுப்பினர் தமிழரசி இரவிக்குமார் வழங்கினார்.
அப்போது மாணவர்களிடையே பேசிய அவர் பள்ளி மாணவர்ளுக்கு மிதிவண்டிகளை இலவசமாக வழங்கியது. முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் ஆட்சிக்காலத்தில் தான் என பெருமிதத்தோடு பேசினார்.
மேலும் பள்ளிக்கு செல்லும் மாணவ மாணவிகளுக்கு உடற்பயிற்சியாகவும் நேரத்திற்கு பள்ளி செல்வதற்கு ஏதுவாகவும் இருக்கும் எனவும் பள்ளி மாணவர்கள் சர்வதேச அளவில் உயர்ந்த இடத்திற்கு வருவதற்கு அரசுப்பள்ளி பெரிதும் உதவுகிறது எனத் தெரிவித்தார்.
இந்த நிகழ்ச்சியின் போது முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சுப.மதியரசன் ஒன்றியக் கழக செயலாளர்கள் ஆறு.செல்வராசன் வே.தமிழ்மாறன் கூட்டுறவு சங்க தலைவர் சுப. தமிழரசன் ஊராட்சி மன்றத் தலைவர் தங்கம் உள்ளிட்டோர் மற்றும் பள்ளி ஆசிரியர்கள் மேலாண்மைக்குழு உறுப்பினர்கள் உட்பட மற்றும் பலர் கலந்து கொண்டனர்.