நாகர்கோவில் ஜூலை 16,
கன்னியாகுமரி மாவட்டம் பூதப்பாண்டி அடுத்த திடல் பகுதியைச் சேர்ந்தவர் ராஜகோபால் வயது 37 இவர் நேற்று குமரி மாவட்ட கலெக்டர் இடம் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:-
நான் பி .இ. படித்துவிட்டு கூலி வேலை செய்து வருகிறேன் எங்கள் ஊரைச் சேர்ந்த பெண் ஒருவரின் உறவினர் ஒருவர் தூத்துக்குடியில் வசித்து வந்தார் அவர் எனக்கு கிராம நிர்வாக அலுவலகத்தில் அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி என்னிடம் ரூபாய் 6 லட்சம் கேட்டார் நான் அவரை நம்பி பணம் கொடுத்தேன் அவர் அதன் பிறகு டிஎன்பிஎஸ்சி மூலம் கிராம நிர்வாக அலுவலராக நான் தேர்வு செய்யப்பட்டதற்கான ஆணையை என்னிடம் தந்தார் நான் அதை நம்பி எந்த மாவட்டத்தில் பணி ஒதுக்கப்பட்டுள்ளது என்று கேட்டு விசாரித்தேன் ஆனால் அவர் என்னை ஏமாற்றி வந்தார் மேலும் அந்த ஆணை போலியானது என்பது தெரிய வந்தது இதைத்தொடர்ந்து நான் அவரிடம் கொடுத்த பணத்தை திருப்பி கேட்டேன் ஆனால் பணத்தை திருப்பி தரவில்லை என்னைப் போன்று பல நபர்களை இவர் ஏமாற்றியுள்ளார் எனவே அவர் மீது உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் அளித்த மனுவில் கூறப்பட்டுள்ளது.