நாகர்கோவில் ஜூன் 27
குமரி மாவட்டம் பூதப்பாண்டி காவல் நிலைய ஆய்வாளரின் கையெழுத்து மற்றும் முத்திரைகளை போலியாக தயார் செய்து ,தொலைந்து போன சொத்து பத்திரங்களுக்கு போலியாக சான்றிதழ் கொடுத்து மோசடி-இதில் இடைத்தரகரான மூர்த்தி என்பவர் கைது- மேலும் இதில் மூளையாக செயல்பட்ட திமுகவை சேர்ந்த முக்கிய நபர் மீது வழக்குப்பதிவு- இந்த மோசடியில் ஒன்பதுக்கு மேற்பட்டோர் போலீசாரின் விசாரணை வளையத்திற்குள் உள்ளனர்.
தமிழகத்தில் போலி பத்திரப்பதிவு தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது எனினும் சார் பதிவாளர் அலுவலகங்களில் சில அதிகாரிகள் மற்றும் புரோக்கர்களின் உதவியால் போலியான பத்திரப்பதிவு செய்யப்படும் சம்பவங்கள் மறைமுகமாக அரங்கேறி வருகின்றன,பொதுவாக பத்திரத்தின் பெயர் மாற்றம் செய்ய வேண்டுமெனில் போலீஸ் நிலையத்திலிருந்து வழங்கப்படும் சான்றிதழ் மிக முக்கியம் அதாவது ஒரு பத்திரம் தவறிவிட்டால் அது தொடர்பாக சம்பந்தப்பட்ட காவல் நிலையத்தில் புகார் அளிக்க வேண்டும் அந்த புகார் மீது போலீசார் மனு ரசீது பதிவு செய்வர் பின்னர் தவறிய பத்திரத்தின் பதிவு எண் இடம் உள்ளிட்டவற்றை கூறி பத்திரிகையில் விளம்பரம் செய்ய வேண்டும். பின்னர் போலீசார் விசாரணை நடத்துவார்கள் அதில் பத்திரம் தவறியது நிரூபணம் ஆனால் தவறிய பத்திரம் கண்டுபிடிக்கப்படவில்லை என்பதற்கான சான்றிதழ் போலீஸ் சார்பில் இருந்து வழங்க வேண்டும் அந்த சான்றிதழை வைத்து பத்திரத்துக்கான அசலை பத்திரப்பதிவு அலுவலகத்தில் பெற்று நிலம் கட்டிடங்கள் வீடுகளுக்கான பெயர் மாற்றம் செய்து கொள்ளப்படும். இந்நிலையில் தற்போது போலீசார் வழங்கும் சான்றிதழை போலியாக தயாரித்து பத்திரப்பதிவு செய்ய முயற்சி நடந்துள்ளது,
கன்னியாகுமரி மாவட்டம் கொட்டாரம் பகுதியில் செயல்பட்டு வரும் பத்திரப்பதிவு அலுவலகத்தில் போலியாக சான்றிதழ் தயார் செய்து சொத்து பத்திரம் வழங்கப்படுவதாக புகார் எழுந்து வந்தது. அதன் அடிப்படையில் விசாரணை மேற்கொண்ட போலீசார் பூதப்பாண்டி காவல் நிலைய ஆய்வாளரின் கையெழுத்து மற்றும் முத்திரைகளை போலியாக தயார் செய்து , தொலைந்து போன சொத்து பத்திரங்களுக்கு போலியாக சான்றிதழ் கொடுத்து சொத்து பத்திர நகல் எடுத்தது தெரியவந்ததுள்ளது. இதனை தொடர்ந்து ,தனியார் பத்திர எழுத்து அலுவலகத்தில் பணியாற்றும் லட்சுமணன் , இடைத்தரகர் மூர்த்தி மற்றும் இடலாகுடி சார் பதிவாளர் அலுவலகத்தில் பத்திர எழுத்தராக பணியாற்றும் பால் தங்கம் என்ற பெண் ஆகிய மூன்று பேரிடம் தனிப்படை போலீசார் விசாரணை நடத்தி வந்த நிலையில் இதில் மூளையாக செயல்பட்டதாக திமுகவை சேர்ந்த முக்கிய நபர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது இந்நிலையில் அவர் தலைமறைவாக உள்ளதாகவும் கூறப்படுகிறது மேலும் இதில் தொடர்புடைய நபர்களை தீவிரமாக போலீசார் தேடி வருகின்றனர். மேலும் இதற்கு பின்னால், பல கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களை பத்திரப்பதிவு செய்து பெரிய அளவிலான கும்பல் இருப்பதாக கூறப்படுவதால் போலீசார் தொடர்ந்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில் புரோக்கர்கள் அரசியல் பிரமுகர்கள் வக்கீல்கள் உள்பட ஒன்பது பேர் சேர்ந்து இந்த மோசடியில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது. எனவே சம்பந்தப்பட்ட 9 பேரிடமும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார் இதில் இடைத்தரகர் மூர்த்தி என்ற நபர் விசாரணையில் கைது செய்யப்பட்டுள்ளார், மேலும் இதில் பலர் தலைமறைவாகி உள்ளதாவும் கூறப்படுகிறது.