பரமக்குடி, ஜன.12 : ராமநாதபுரம் மேலூர் நான்கு வழி சாலை பணிகளை நெடுஞ்சாலைத்துறை கண்காணிப்பு பொறியாளர் ரமேஷ் ஆய்வு மேற்கொண்டார்.
ராமநாதபுரத்தில் இருந்து பாண்டியூர் – நயினார்கோவில் வழியாக மேலூர் செல்லும் இரு வழிச்சாலை போக்குவரத்து நெரிசல் மற்றும் போக்குவரத்து நேரத்தை குறைப்பதற்காக நான்கு வழிச்சையாக மாற்றுவதற்கு முதலமைச்சரின் சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.60.50 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, பணிகள் துரிதமாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் நெடுஞ்சாலைத்துறை பரமக்குடி உட்கோட்டத்திற்கு உட்பட்ட நாகாச்சி பகுதியில் நடைபெற்று வரும் பணிகளை நெடுஞ்சாலைத்துறை கண்காணிப்பு பொறியாளர் ரமேஷ் பார்வையிட்டு ஆய்வு செய்து பணிகளே துரிதப்படுத்துமாறு கேட்டுக் கொண்டார். அப்போது, நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் முருகன்,பரமக்குடி பிரிவு நெடுஞ்சாலைத் துறை உதவி கோட்ட பொறியாளர் கண்ணன்,உதவி பொறியாளர் பிரபாகரன் மற்றும் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் உடனிருந்தனர்.
பட விளக்கம்.
ராமநாதபுரம் -மேலூர் நான்கு வழி சாலை அமைக்கும் பணியினை பரமக்குடி உட்கோட்டத்திற்கு உட்பட்ட நாகாச்சி பகுதியில் நெடுஞ்சாலைத்துறை கண்காணிப்பு பொறியாளர் ரமேஷ் ஆய்வு செய்தார்.