திண்டுக்கல் ஜூலை :30
திண்டுக்கல் மாவட்டம், கொசவபட்டி புனித அந்தோணியார் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற பள்ளி நூலக கட்டிட அடிக்கல் நாட்டு விழாவில் திண்டுக்கல் மறைமாவட்ட மேதகு ஆயர் பி. தாமஸ் பால்சாமி கலந்து கொண்டு பள்ளி நூலக அடிக்கலை நாட்டி சிறப்புரை ஆற்றினார். இவ்விழாவில் திண்டுக்கல் திருவருட் பேரவை தலைவர் டாக்டர்.கே. ரத்தினம், திண்டுக்கல் திருவருட் பேரவை பொருளாளர் டாக்டர். நாட்டாண்மை என்.எம்.பி. காஜாமைதீன், திருவருட் பேரவை இணைச் செயலாளர் எம். திபூர்சியஸ், முதன்மைகுரு பங்குத்தந்தை சகாயராஜ், மீனாட்சி சுந்தரம், தொழிலதிபர் கே.சாதிக் ஆகியோர் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியில் தலைமை ஆசிரியர், இருபால் ஆசிரிய பெருமக்கள், அலுவலகப் பணியாளர்கள், பள்ளி மாணவ, மாணவியர்கள் 2500-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தனர்.இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை பள்ளியின் தாளாளர் பங்குத்தந்தை ஐ. ஜான்சன் எடின்பர்க், டாக்டர்.என்.எஸ்.ஏ.ஜெய ஆரோக்கிய செல்வன், ஆசிரியர் ராஜ்குமார், ஐ.தனராஜ் ஆகியோர் சிறப்பாக ஏற்பாடுகளை செய்து இருந்தனர்.