தஞ்சாவூர் செப்.17.
தஞ்சாவூர் மாவட்ட மைய நூலகத் தில் கழிவறை கட்டுவதற்காக டி கே ஜி நீலமேகம் எம்எல்ஏ தொகுதி மேம்பாடு நிதியின் கீழ் நிதி ஒதுக்கினார்.
மாவட்ட மைய நூலகத்தில் கழிவறை கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது நிகழ்ச்சிக்கு டி கே ஜி நீலமேகம் எம்எல்ஏ தலைமை தாங்கினார் இதில் முரசொலி .எம்.பி மேயர் சண்.ராமநாதன் துணை மேயர் டாக்டர் அஞ்சுகம் பூபதி ஆகியோர் கலந்துகொண்டு செங்கல்லை எடுத்து வைத்து அடிக்கல் நாட்டி பணியை தொடங்கி வைத்தனர்.
நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் தியாகராஜன் ஊராட்சி குழு தலைவர் உஷா புண்ணிய மூர்த்தி நூலக அலுவலர் முத்து நூலக வாசகர் வட்டதலைவர் நல்லாசிரியர் கோபாலகிருஷ்ணன் திமுக தலைமை செயற்குழு உறுப்பினர் செல்வம் மாநகராட்சி கவுன்சிலர்கள் உஷா, தமிழ் வாண ன், நீலகண்டன் ,ஆனந்த், கலையரச ன் சந்திரலேகா சசிகுமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.