நாகர்கோவில் டிச 17
நாகர்கோவில் தொகுதி அதிமுக பொதுக்குழு உறுப்பினரும் முன்னாள் கன்னியாகுமரி மாவட்ட கூட்டுறவு நூற்பாலை சங்க தலைவருமான சகாயராஜ் (16.12.2024) உடல் நலக்குறைவால் காலமானார்.
நேற்று சென்னையில் எடப்பாடி கே பழனிச்சாமி தலைமையில் நடந்த கழகப் பொதுக்குழு கூட்டத்தில் கலந்து கொண்ட சகாயராஜ் கூட்டம் முடிந்ததும் ஓய்வெடுத்து விட்டு இரவு ஊர் திரும்பி வர இருந்த நிலையில் திடீரென்று நெஞ்சு வலி ஏற்பட்டது உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
மராடைப்பால் காலமான சகாய ராஜ் உடலுக்கு சென்னை மருத்துவமனையில் அ.தி.மு.க அவைத்தலைவர் தமிழ் மகன் உசேன், கன்னியாகுமரி சட்டமன்ற உறுப்பினரும் குமரி கிழக்கு மாவட்ட அதிமுக செயலாளருமான தளவாய் சுந்தரம், முன்னாள் அமைச்சரும் அ.தி.மு.க அமைப்பு செயலாளருமான கே டி பச்சைமால் மற்றும் கட்சியினர் மலர் வைத்து அஞ்சலி செலுத்தினர்.
இவர் நாகர்கோவில் நகராட்சியாக இருந்தபோது இரண்டு முறை13 வது வார்டு மக்களால் கவுன்சிலராக தேர்ந்தெடுக்கப்பட்டு சிறப்பாக மக்கள் பணி செய்தவர். மேலும் பெரிய ராசிங்கன் தெரு கைத்தறி கூட்டுறவு நெசவாளர் கூட்டுறவு சங்க தலைவராக 10 ஆண்டுகள் பணியாற்றியவர் ஆவார். இவர் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்தநாளின் போது தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கோவில், சர்ச், மசூதி ஆகியவற்றில் சிறப்பு வழிபாடு செய்து புரட்சித்தலைவி அம்மாவின் விசுவாசியாக வலம் வந்தவர் ஆவார். பல்வேறு பொறுப்புகளில் பணியாற்றி வந்தாலும் பொதுமக்களின் தேவைகளுக்காக நேரம் காலம் பார்க்காமல் கட்சி பாகுபாடு இன்றி செயலாற்றி வந்தவர் என்ற பெருமையும் இவருக்கு உண்டு. வடசேரி பகுதியில் எம்.ஜி.ஆருக்கு சிலை வைக்கும் போது அதற்காக முயற்சி எடுத்த தலைவர்களுடன் தோள் கொடுத்து அனைத்து விதமான உதவிகளையும் செய்தவர். குமரி மாவட்ட அதிமுகவினரின் போற்றுதலுக்கும் மரியாதைக்கும் உரியவராக விளங்கிய சிறப்பும் இவருக்கு உண்டு. இந்நிலையில் குமரி கிழக்கு மாவட்ட அதிமுக சார்பில்
அன்னாரை இழந்து வாடும் அவர்தம் குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவிக்கப்பட்டது.