கிருஷ்ணகிரி,டிச.13- கிருஷ்ணகிரியில்
அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் முன்னாள்
தலைவர் அன்னை
சோனியா காந்தியின் பிறந்த நாளில் கிராமங்கள் தேறும் சிறப்பான முறையில் கொண்டாட
வேண்டும் என தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப் பெருந்தகை தெரிவித்து இருந்தார்.
இதன் அடிப்படையில் கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டத்திற்கு உட்பட்ட
காட்டிநாயனப்பள்ளி கிராமத்தில் வட்டார காங்கிரஸ் கட்சி சார்பில் அன்னை சோனியா காந்தியின் 78-வது பிறந்த தின விழா வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது.
மாவட்ட காங்கிரஸ் பொதுச் செயலாளர் பாண்டுரங்கன் தலைமையில்
நடைப்பெற்றது,
இந்த விழாவிற்கு சிறப்பு அழைப்பாளராக காங்கிரஸ் கட்சியின் கிழக்கு மாவட்டத் துணைத் தலைவர் பி.சி. சேகர், முன்னால் மாவட்ட தலைவர் ராஜகுமாரவேல், அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் முன்னால் உறுப்பினர்
துரை என்ற துரைசாமி, காங்கிரஸ் கட்சியின்
SCst பிரிவு முன்னால் மாநில அமைப்பாளர்
ஆறுமுக சுப்பிரமணி, கலைப்பிரிவு மாவட்ட தலைவர் கோவிந்தசாமி, வர்த்தக காங்கிரஸ் மாவட்டத்தலைவர் முபாரக் ஆகியோர் கலந்துக் கொண்டு அன்னை இந்திரா காந்தியின்
திரு உருவச்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள் இதனையடுத்து தேசிய ஊராக வேலை உறுதித்திட்டத்தின் கீழ்பணி புரிந்து வரும் பெண்களுக்கும் இனிப்புகள் வழங்கி உற்சாகமாக கொண்டாப்பட்டது.
அப்போது போசிய பெண்கள் போதிய வேலை வாய்ப்புகள் இன்றி வறுமையில் வாடிய போது நூறு நாள் வேலைத்திடத்தின் கீழ் எங்களுக்கு வேலை வாய்ப்பு வழங்கி ஊதியமும் வழங்கப்பட்டது இந்த ஊதியத்தின் மூலம் வறுமையை விரட்டியதோடு நாங்களும் சொந்தகாலில் நிற்க இந்த வேலை வாய்ப்பு மிகவும் பயனுள்ளதாக இருந்தது இந்த வேலையின் மூலம் குழந்தைகளை படிக்க வைப்பதோடு தங்களின் தேவைக்கும் மிகவும் பாதுகாப்பாக இந்த நூறு நாள் வேலை உள்ளது, இந்த வேலையை வழங்கிய அழகு பார்த்து வரும் அன்னை சோனியாகாந்தி எங்களை போன்ற ஏழை மக்களின் வாழ்வில் ஒளி விளக்காகவும், அன்னப் பூரணியாகவும் வாழ்ந்து வரும்
அன்னை சோனியாகாந்தி நீண்ட காலம் நலமுடன் வாழ வேண்டும் என உருக்கத்துடன் தெரித்தனர்.
அப்போது முன்னால் வட்டாரத் தலைவர் பன்னி செல்வம், சேவாத்தள மாவட்டத் தலைவர் தேவராஜ், நகர துணைத் தலைவர் இருதயம்,
ராகுல் பேரவை குட்டி, முன்னால் ஊராட்சி மன்றத் தலைவர்
கண்ணன், ஏழுமலை, சக்கரவர்த்தி,
ஆட்டோ செங்கலிங்கம், திம்மராஜ் செல்வம் உள்ளிட்ட ஏராளமானவர்கள் கலந்துக்
கொண்டனர்.