நாகர்கோவில் – நவ – 14,
கேரள மாநிலம் திருவனந்தபுரம் , புத்தன் பாலம் பகுதியை சேர்ந்த சசிஜோஸ் ( 71 ), திருவனந்தபுரம் கேரள போக்குவரத்து கழகத்தில் மேலாளராக பணி புரிந்து ஓய்வு பெற்றவர். அதே பகுதியை சேர்ந்த இவரது சகோதரி செலின் ஜோஸ் (70) , இவரது கணவர் ஆஸ்டின் சுந்தர் என்பவர் திருச்சியில் உள்ள பெல் நிறுவனத்தில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். மேற்படி ஆஸ்டின் சுந்தர் என்பவருடன் உடன் பிறந்தவர்கள் இருவர் சுசீலா மற்றும் டேவிட்சன். டேவிட்சன் என்பவர் இறந்துவிட்டார் . இவர்களுக்கு பூர்வீகமான ஒரு ஏக்கர் 90.5 சென்ட் நிலம் வடசேரி காவல் நிலைய எல்கைக்கு உட்பட்ட கனியாகுளத்தில் உள்ளது. மேற்படி இடத்தினை ஆஸ்டின் சுந்தர் தனது சகோதரியான சுசிலாவுக்கு தெரியாமல் அவருக்கு உண்டான 63.5 சென்ட் நிலத்தை மேற்படி தனது மனைவியின் அண்ணன் சசி ஜோஸ் மனைவியின் புகைப்படத்தை வைத்து தங்கை சுசீலாவின் முகவரியில் போலியாக ஆதார் அட்டை தயாரித்து வடசேரி சார்பதிவாளர் அலுவலகத்தில் வைத்து ( 12.11.24 ) பதிவு செய்யப்பட்டுள்ளது. மேற்படி ஆவணம் தொடர்பாக விசாரணை செய்த போது ஆதார் அட்டை போலியாக தயாரித்தது கண்டுபிடிக்கப்பட்டு இது தொடர்பாக வடசேரி சார்பதிவாளர் தகவலின் பெயரில் கோட்டார் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ஆஸ்டின் சுந்தரை விசாரணைக்காக கோட்டார் காவல் நிலையம் கொண்டு சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.