பூதப்பாண்டி – அக்டோபர் -09-
குமரி மாவட்டம் பூதப்பாண்டியை அடுத்துள்ள எட்டாமடை பகுதியில் கடந்த ஞாயிற்றுகிழமை அதிகாலை நேரத்தில் ஒரு கரடி மெயின் ரோட்டில் நடமாடுவதையும் அந்த பகுதியில் உள்ள தெரு நாய்கள் அதை விரட்டுவதும் கரடி திரும்ப நாய்களை விரட்டுவது போன்ற ஒரு வீடியோ சமூக வலை தலங்களில் பரவியது இதை பார்த்த அப்பகுதி பொதுமக்கள் அச்சம் அடைந்து இது குறித்து அழகிய பாண்டியபுரம் வனச்சரக அலுவலர்கலையரசனுக்கு தகவல் கொடுத்துள்ளார்கள் அதன் அடிப்படையில் வனத்துறை ஊழியர்கள் கூட்டு தணிக்கை என்ற அடிப்படையில் ஒரு குழுவாக கேசவன் புதூர் பகுதியில் ஒரு குறிப்பிட்ட இடத்தில் ஆட்கள் பயன்பாடு இல்லாத கட்டிடங்கள், புதர் மண்டிய பகுதிகள் போன்றவைகள் சென்று பார்வையிட்டு கரடி உள்ளதா அல்லது வந்ததற்க்கான அடையாளங்கள் உள்ளதா என்று ஆய்வு செய்து கரடி ஊருக்குள் வராமல் இருப்பதற்க்கான வழிமுறைகளையும் பொதுமக்களிடம் எடுத்து கூறினார்கள். மேலும் இது குறித்து நாங்கள் இரவு பகலாக சுழற்ச்சி முறையில் கன்கானிப்போம் எனவே பொது மக்கள் அச்சமடைய தேவையில்லை என்று கூறினார்கள்.