திருச்செந்தூர் அருகே இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.75லட்சம் மதிப்புள்ள வெளிநாட்டு சிகரெட், செட்டாப் பாக்ஸ்களை கியூ போலீசார் பறிமுதல்:-
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகேயுள்ள வீரபாண்டியபட்டணம் கடற்கரைக்கு செல்லும் பாதையில் கியூ பிரிவு ஆய்வாளர் விஜய அனிதாவுக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் உதவி ஆய்வாளர் ஜீவமணி தர்மராஜ், சிறப்பு உதவி ஆய்வாளர் ராமர், தலைமை காவலர் மணிகண்டன், இருதயராஜ், குமார், இசக்கி முத்து, முதல் நிலை காவலர் பழனி பாலமுருகன் ஆகியோர் இரவு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.இன்று அதிகாலை 4.30 மணிக்கு அந்த வழியாக வந்த டெம்போ வாகனததை நிறுத்தி சோதனை செய்தபோது அதில், சுமார் 30 கிலோ எடை கொண்ட 15 மூட்டை குழம்பு புளி, சுமார் ஒரு லட்சம் மான்செஸ்டர்(UK) சிகரெட்கள், மற்றும் 295 சன் டைரக்ட் HDடிடிஎச் செட்டாப் பாக்ஸ், மற்றும் 100 டிஷ் டிவி செட்டாப் பாக்ஸ் இருந்தது. இதனை இலங்கைக்கு கடத்த முயன்றது தெரியவந்தது. இதையடுத்து ரூ.75 லட்சம் மதிப்புள்ள பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர். இவற்றை பைபர் படகு மூலம் இலங்கைக்கு கடத்த முயன்ற மர்ம நபர்கள் தப்பிச் சென்றுவிட்டனர். அவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.