கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூர் வட்டம், தொரப்பள்ளி அக்ரஹாரம் கிராமத்தில், செய்தி மக்கள் தொடர்புத்துறை சார்பாக, மூதறிஞர் இராஜாஜி அவர்களின் 146வது பிறந்த நாளையொட்டி, மூதறிஞர் இராஜாஜி அவர்கள் பிறந்த இல்லத்தில், பிறந்த நாள் விழா மாவட்ட ஆட்சித்தலைவர் தl.கே.எம்.சரயு ., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
இவ்விழாவில், இராஜாஜி அவர்களின் திருவுருவ படத்திற்கு மாவட்ட ஆட்சித்தலைவர் .கே.எம்.சரயு ., அவர்கள், ஓசூர் மாநகராட்சி மேயர் .எஸ்.ஏ.சத்யா அவர்கள் முன்னிலையில், மலர் தூவி மரியாதை செலுத்தினார். தொடர்ந்து, இராஜாஜி அவர்கள் பிறந்த இல்லத்தில் உள்ள திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
தொடர்ந்து, மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள், பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் மூதறிஞர் இராஜாஜி அவர்களுடைய வாழ்க்கை வரலாறு குறித்த புகைப்படங்களை பார்வையிட்டார். மேலும், இவ்விழாவில் கலந்துகொண்ட பொதுமக்கள் மற்றும் மாணவ, மாணவியர்களுக்கு இனிப்புகளை வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில், ஓசூர் மாநகராட்சி ஆணையாளர் .எச்.எஸ்.ஸ்ரீகாந்த் ., ஓசூர் சார் ஆட்சியர் .பிரியங்கா ., ஓசூர் மாநகராட்சி துணை மேயர் .ஆனந்தைய்யா, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் .சு.மோகன், உதவி மக்கள் தொடர்பு அலுவலர் செய்தி.அ.க.ரமேஷ், பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர் (கட்டிடம்) .அருள், ஓசூர் வட்டாட்சியர் .சின்னசாமி, வட்டார வளர்ச்சி அலுவலர் .பாலாஜி, ஒன்றிய குழு உறுப்பினர் .உமா சீனிவாசலு, ஊராட்சி மன்றத் தலைவர் .வி.சாந்தம்மா நஞ்சப்பா, .ராமு, ஊராட்சி மன்ற செயலாளர் .எஸ்.சந்திரசேகர் மற்றும் அரசு துறை அலுவலர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.