மதுரை அண்ணா நகரில் உள்ள அப்போலோ சிறப்பு மருத்துவமனை, தென் தமிழகத்திலேயே முதன் முறையாக பெண்களுக்கு விரிவான மார்பக நல சிகிச்சையை வழங்குவதற்காக பிரத்யேகமாக அப்போலோ பிரெஸ்ட் கிளினிக்கை துவங்கி இருக்கிறது. இந்த கிளினிக்கின் மூலம் பெண்களின் மார்பகம் குறித்த ஆரோக்கியத்தையும் மற்றும் அதன் பிரச்சனைகளையும் கண்டறிந்து அதற்கேற்ப சிகிச்சை பெறும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. மதுரை மாவட்ட ஆட்சியர் சங்கீதா ஐஏஎஸ் அப்போலோ பிரெஸ்ட் கிளினிக்கை குத்து விளக்கேற்றி துவக்கிவைத்தார். அவருடன் மதுரை மண்டல முதன்மைக் கல்வி அதிகாரி கார்த்திகா, மகாத்மா கல்வி குழுமத்தின் தலைவர் பிரேமலதா, மகளிர் தொழில் முனைவோர் (WE) அமைப்பின் தலைவர் ராஜகுமாரி ஜீவகன், லேடி டோக் கல்லூரியின் முதல்வர் டாக்டர் பியூலா ஜெயஸ்ரீ மற்றும் சீதாலட்சுமி கல்வி குழுமத்தின் தாளாளர் பூர்ணிமா வெங்கடேஷ் ஆகியோர் விழாவில் கலந்து கொண்டு சிறப்பித்தனர். அப்போலோ மருத்துவமனையின் தலைமை செயல் அதிகாரி P. நீலகண்ணன் அப்போலோ மருத்துவமனை தென்தமிழக மக்களின் மருத்துவ நலனை மேம்படுத்துவதில் எங்களுக்கு உள்ள அர்ப்பணிப்பு உணர்வின் வெளிப்பாடாக, தற்போது அப்போலோ பிரெஸ்ட் கிளினிக் துவங்கப்பட்டுள்ளது. பெண்களின் மார்பகம் சார்ந்த அனைத்து பிரச்சனைகளுக்கும் ஆலோசனைகள், நோய் கண்டறிதல் பரிசோதனைகள், அறுவை சிகிச்சை என பல்முனை மருத்துவ வசதிகளும் இந்த கிளினிக்கில் வழங்கப்படும். மேலும் புற்றுநோய் மருத்துவர்கள், மகப்பேறு மருத்துவர்கள், ஒட்டுறுப்பு அறுவை சிகிச்சை நிபுணர்கள், கதிரியக்கம் மற்றும் நோயியல் நிபுணர்கள் உட்பட இந்த கிளினிக் ஒரு விரிவான மருத்துவ குழுவைக் கொண்டிருக்கும்” என்றார். புற்றுநோய் அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் கே.பாலு மகேந்திரா பேசுகையில், தென்தமிழகத்தில் மார்பக பிரச்சனைகளால் அவதிப்பட்டு வரும் பெண்களுக்கு நம்பிக்கையையும், மருத்துவ வசதியையும் அளிக்கக் கூடிய வகையில், ஒரு மிக முக்கியமான முன்னெடுப்பாக அப்போலோ பிரெஸ்ட் கிளினிக் உருவாகி உள்ளது. கிளினிக்கின் விரிவான மருத்துவ அணுகுமுறையின் மூலம் பெண்களை அச்சுறுத்தும் மார்பக புற்றுநோயை ஆரம்பக்கட்டத்திலேயே துல்லியமாக கண்டறிந்து அவர்களுக்கான மருத்துவ சிகிச்சையை கொடுப்பதில் இந்த அப்போலோ பிரெஸ்ட் கிளினிக் ஒரு சிறந்த தீர்வாக இருக்கும். பெண்கள் முதல் முறையாக கிளினிக் வரும்போதே பரிசோதனைகள் செய்யப்பட்டு, நோயின் தன்மையை கண்டறிந்து சிகிச்சை அளிக்கப்படும். மார்பக புற்றுநோய் அறுவை சிகிச்சைக்கான சிகிச்சைகளில் பிரெஸ்ட் கன்செர்விங் அறுவை சிகிச்சை, கீமோதெரபி, டார்கெட்டெட்தெரபி, மேம்பட்ட கதிர்வீச்சு சிகிச்சை மற்றும் பல புதுமையான சிகிச்சைகள் சிகிச்சை பெறுபவரின் தேவைகளுக்கு ஏற்ப வழங்கப்படும்.” இந்த விழாவின் முக்கிய நிகழ்வாக சிறப்பு விருந்தினர்கள், ஏஐ எனப்படும் ஆர்டிபிசியல் இண்டெலிஜென்ஸ் மூலம் இயங்கும் மார்பக நல பரிசோதனைக்கான பிரத்யேக க்யூ ஆர் ஸ்கேனரையும் வெளியிட்டனர். 7 கேள்விகளுக்கு 2 நிமிடங்களில் பதிலளிக்கும் விதமாக இது உருவாக்கப்பட்டு இருக்கிறது. பெண்களின் மார்பக நலத்தை மதிப்பிடுவதற்கு இது நிச்சயமாக உதவும். தென் தமிழகத்திலேயே இது ஒரு புதிய முயற்சி. இந்நிகழ்ச்சியில் புற்றுநோய் சிகிச்சை மருத்துவ நிபுணர்கள், மருத்துவ சேவைகளின் இணை இயக்குனர் டாக்டர் கே.பிரவீன் ராஜன், மார்கெட்டிங் பொது மேலாளர் மணிகண்டன் மற்றும் நிர்வாக பொது மேலாளர் கற்பகவல்லி, ஆகியோரும் கலந்து கொண்டனர்.
முதன் முறையாகமார்பக நல சிகிச்சை

Leave a comment
Weekly Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
- Advertisement -



Global Coronavirus Cases
Confirmed
0
Death
0
More Information:Covid-19 Statistics