திருப்பூர்,பிப்:7
தமிழ்நாடு கலை பண் பட்டுத்துறை சார்பில், ‘கலைச்சுடர்மணி’ மற்றும் கலை நன்மணி’ பட்டம் பெற்ற கலைஞர்களுக்கு பாராட்டு
விழா நடந்தது. தமிழக அரசின் கலை பண்பாட்டு துறை சார்பில், பல்வேறு துறைகளில் சாதனை படைத்துள்ள கலைஞர்களுக்கு, விருதும், பொற்கிழியும் வழங் கப்பட்டது. உடுமலையில் நடந்த நிகழ்ச்சியில், திருப்பூர் ஸ்ரீவிஸ்வேஸ் வரசுவாமி கோவிலில் பணியாற்றும், கலைஞர்கள் இருவர் பொற்கிழி பெற்றுள்ளனர்.
கோவிலின் ஆஸ்தான நாதஸ்வர வித்வான் சிங் காரவேலுவுக்கு, ‘கலை நன்மணி’ என்ற பட் டமும், ஓதுவாமூர்த்தி தியாகராஜனுக்கு ‘கலைச் சுடர்மணி’ என்ற பட்ட மும் வழங்கப்பட்டது.
விருது பெற்ற தியாகராஜன் மற்றும் சிங்காரவேலு.
கலை பண்பாட்டுத்துறை சார்பில் பட்டம் வென்ற கோவில் கலைஞர்களுக்கு, கோவில் நிர்வாகம் சார்பில் பாராட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது.
கோவில் சிவாச்சாரி யார்கள், அறங்காவலர்கள் மற்றும் கோவில் அலு வலர்கள் மற்றும் பணி யாளர்கள் வாழ்த்தினர்.