திருமங்கலம் ஆக 01
கோவையில் சர்வதேச அளவில் கராத்தே போட்டி மற்றும் சிலம்பப் போட்டி நடைபெற்றது. இதில் வெற்றி பெற்று கோப்பைகளை வென்ற திருமங்கலத்தைச் சேர்ந்த மாணவ மாணவியர்களுக்கு பயிற்சி பள்ளி ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் உற்சாக வரவேற்ப்படித்து வாழ்த்து தெரிவித்தனர்.
மேலும்
ஜப்பான் ஹயாசிகா இன்டர்நேஷனல் ஸ்கூல் ஃபைட்டர்ஸ் அகாடமிஇணைந்து நடத்திய ஆறாவது சர்வதேச அளவிலான கராத்தே சிலம்பப் போட்டி கோவையில் தனியார் மண்டபத்தில் நடைபெற்ற
இப்போட்டியில் திருமங்கலம் அருகே மறவன்குளம் சென்டோபோசி தற்காப்பு கலைக்கூடம் சார்பாக 32 மாணவர்கள் பங்கேற்றனர்.
போட்டியில் பங்கேற்ற மாணவர்கள் முதல் பரிசாக 10 கோப்பைகளும் இரண்டாவது பரிசாக 15 கோப்பைகளும் மூன்றாவது பரிசாக 12 கோப்பைகளும் வென்று சாதனை படைத்துள்ளனர்.
மேலும் மலேசியா கராத்தே அமைப்பின் தலைவர் கான்சி தோனி பொன்னையா மற்றும் செயலாளர் தியாகு பொன்னையா ஆகியோர் வெற்றி பெற்ற மாணவ மாணவியர்களுக்கு பரிசுகள் மற்றும் கோப்பைகளை வழங்கினர்.
கோப்பை வென்ற மாணவர்களுக்கு உலக சோட்டோ கான் கராத்தே சம்மேளன தலைவர் மணிகண்டன்,
செயலாளர் கண்ணன் மற்றும் பொருளாளர் பொன்னுசாமி ராஜா, தொழில்நுட்ப இயக்குனர் திருப்பதி வாழ்த்துக்கள் தெரிவித்தனர்.
கோவை கராத்தே அமைப்பின் தலைவர் சென்சாய் ரமேஷ்குமார்
சிவராஜ் ஆகியோர் போட்டிக்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பள்ளியின் பயிற்சியாளர் வரதராஜன் வெங்கடேசன் முகிலன் பயிற்சி அளித்துள்ளனர்.மலேசியா எம்ஜிஆர் சிலம்பம் அகடமி சார்பில் மற்றும் ஃபைடர் கிளப் கோவை இணைந்து நடத்திய சர்வதேச அளவிலான சிலம்ப போட்டியில் நமது பயிற்சி பள்ளியைச் சேர்ந்த சர்வதேச விளையாட்டு வீரர் கேரிகிப்ட்சன் சாம் 12 வயதுக்கு உட்பட்டோருக்கான தனிநபர் தனித்திறமை பிரிவில் இரண்டாம் பரிசு பெற்றுள்ளார் மாணவிகளுக்கான ஏழு வயது பிரிவில் ஹேமாலினி ஸ்ரீ முதல் பரிசு பெற்றுள்ளார்.
இந்த மாணவர்கள் அனைவரும் பயிற்சி பள்ளிக்கு கோப்பையுடன் வருகை தந்தனர் அவர்களுக்கு பயிற்சி பள்ளி ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.