கிருஷ்ணன் கோயில்
அருள்மிகு கலசலிங்கம் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு “வழிகாட்டும் பயிற்சி “ஏழு நாட்கள் நடைபெற்றது.
நிறைவு விழாவில், சிவகாசி, சார் ஆட்சியர் மேதகு பிரியா ரவிச்சந்திரன் தலைமை விருந்தினராக கலந்து கொண்டு,பேசுகையில்,
“தன்னம்பிக்கையுடன் கடின உழைப்பு இருந்தால் , மாணவர்கள் இளம் வயதிலும் எதையும் சாதிக்கலாம் ” என்று அறிவுரை வழங்கினார்,
வத்திரா யிருப்பு வருவாய் வட்டாட்சியர் மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.
கல்லூரி முதல்வர் எஸ்.கோபாலகிருஷ்ணன் வரவேற்புரை வழங்கினார்.
பேராசிரியர்கள் விழா ஏற்பாடுகளை சிறப்பாக செய்திருந்தனர்.
முதலாம் ஆண்டு மாணவர்கள் அனைவரும் கலந்து கொண்டு பயன் பெற்றனர்