சிவகங்கை , ஜூலை – 10
சிவகங்கை கவியோகி சுத்தானந்த பாரதி மாவட்ட மைய நூலகம் செயல்பட்டு வருகிறது. இந்த நூலகத்தில் நூலக நண்பர்கள் திட்டம் மற்றும் தன்னார்வலர் குழு இணைந்து பள்ளி மாணவ மாணவியர்களுக்கு நூலக உறுப்பினர் அட்டை மற்றும் புத்தகம் வழங்கும் விழா
மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித் தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில் நூலகர் சூ . முத்துக்குமார் வரவேற்றுப் பேசினார். மாவட்ட நூலக அலுவலர் தே . ஜான்சாமுவேல் முன்னிலை வகித்தார். விழாவின் தொடக்கமாக மாவட்ட வருவாய் அலுவலர் வ. மோகனச்சந்திரன் வாசிப்பின் அவசியம் குறித்தும் மாணவர்களின் ஒழுக்கமான எதிர்காலம் குறித்தும் விரிவாக பேசினார் .
இதனைத் தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் பள்ளி மாணவ , மாணவிகளுக்கு நூலக உறுப்பினர் அட்டைகளையும் மற்றும் புத்தகங்களையும் வழங்கிய பின்னர் அவர் பேசியதாவது சிவகங்கை மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் மாவட்டத்தில் கல்லூரி மாணவ , மாணவிகள் மட்டுமின்றி அனைத்து தரப்பு மாணவர்களுக்கும் பயனுள்ள வகையில் சிவகங்கையில் நூலகங்களின் செயல்பாடுகளும் பயிற்சி வகுப்புகளும் நடந்து வருகிறது. மாணவர்களின் எதிர்காலத்திற்கு பலன் கிடைக்கும் வகையில் போட்டித் தேர்வுகளுக்கு தேவையான பயிற்சி வகுப்புகள் நடைபெற்று வருகிறது .
மேலும்
உண்டு உறைவிட மாதிரிப் பள்ளி மாணவர்களும் தொடர்ந்து ஊக்குவிக்கப்பட்டு வருகிறார்கள். மாவட்ட மைய நூலகத்தில் கலை அறிவியல் மற்றும் அரசியல் உள்ளிட்ட பல்வேறு வகையான அறிவு சார்ந்த புத்தகங்கள் இரண்டு லட்சத்திற்கும் மேல் இங்கு இடம் பெற்றுள்ளன. இவை மட்டுமின்றி தமிழ் ஆங்கில மொழிகளில் உள்ள தினசரி நாளிதழ்களும் இங்கு வருகின்றன.
இவற்றை மாணவர்கள் எந்தவித கட்டணமும் இன்றி படித்துப் பயன்பெறலாம் வெளியில் அதிக அளவில் பணம் செலவழித்து புத்தகங்கள் எவையும் வாங்காமல் நூலகங்களுக்கு வந்து அனைத்து வகையான புத்தகங்களையும் எவ்வித கட்டணமும் இன்றி மாணவர்கள் ஒரே இடத்தில் படித்துப் பயன்பெறலாம் நூலகங்களிலும் போட்டித் தேர்வு மையங்களிலும் உள்ள அறிவு சார்ந்த புத்தகங்களை மாணவர்கள் எடுத்துப் படித்து பயன்பெற வேண்டும் என பேசினார்.
இவ்விழாவில் நூலக நண்பர்கள் திட்டம் சார்பில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் கண்காணிப்பாளர் ரமேஷ்கண்ணன் ரமண விகாஸ் மேல்நிலைப் பள்ளியின் செயலாளர் கி.முத்துக்கண்ணன் ஆகியோர் பங்கேற்று சிறப்பித்தார்கள். விழாவிற்கான ஏற்பாடுகளை நூலக நண்பர்கள் திட்டம் சார்பில் எழுத்தாளர் அ.ஈஸ்வரன் மற்றும் நூலக நிர்வாகம் சிறப்பாக செய்திருந்தனர்.