நீலகிரி
மாவட்டம் ஊரக வளர்ச்சி முகமை கூட்டம் எம்பி ராசா. தலைமையில் அரசு தலைமை கொறடா ராமச்சந்திரன், நீலகிரி ஆட்சியர் லட்சுமி பவ்யா ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.
இதனைத் தொடர்ந்து
கூட்டத்தில் பேசிய ராசா
கலைஞர் கனவு இல்ல திட்டம் நமக்கு நாமே திட்டம் அண்ணா மறுமலர்ச்சி திட்டம் முதல்வரின் சாலை மேம்பாட்டு திட்டம் மத்திய அரசு திட்டங்கள் நபார்டு ஜல்ஜீவன் திட்டம் ஆகியவை மூலம் நடைபெறும் பணிகள் பற்றி விரிவாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டு
ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டம் தோட்ட கலைத்துறை வருவாய்த்துறை மகளிர் திட்டம் செய்தி மக்கள் தொடர்பு துறை ஆகியவற்றின் பணிகள் 98 சதவீதம் நிறைவை தந்துள்ளதாக ராசா தெரிவித்தார்.
இந்த கூட்டத்தின் போது
நீலகிரி கோவை திருப்பூர் ஈரோடு மாவட்ட பல்துறை அரசு அலுவலர்கள் வருவாய்த்துறை மற்றும் மாவட்ட திட்ட அலுவலர்கள் காவல்துறை அதிகாரிகள் பேரூராட்சி ஊராட்சி நகராட்சி பிரதிநிதிகள். கலந்து கொண்டனர்.